இந்தவார நாமினேஷன் லிஸ்ட் ரெடி... வெளியேறுகிறாரா அர்ச்சனா?

இந்தவார நாமினேஷன் லிஸ்ட் ரெடி... வெளியேறுகிறாரா அர்ச்சனா?

பிக்பாஸ் அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  • Share this:
பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுஜித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ரமேஷ் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் நேற்று நடைபெற்றது. வழக்கமாக நாமினேஷன் கன்பெக்ஷன் ரூமில் ரகசியமாக நடைபெறும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக அனைவர் முன்னிலையில் ஓபன் நாமினேஷனாக நடைபெற்றது.

இதில் அனைவரும் தாங்கள் தேர்வு செய்த இருவரை அனைவரது முன்னிலையிலும் நாமினேட் செய்தனர். அதில் ஆரி, ஆஜித், ஷிவானி, அர்ச்சனா, அனிதா, சோம் சேகர், ரியோ ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்கள். ஏற்கனவே அர்ச்சனா குரூப்பில் இருந்து இருவர் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரமும் அர்ச்சனா அல்லது சோம் வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நாமினேஷன் நடைபெற்ற போது ரியோ, அனிதாவை நாமினேட் செய்யவில்லை. ஆனாலும் அனிதா, தனி ஆளாக நின்று அனைவருக்கும் சமைத்ததாக கூறினார். ஆனால் அவர் உதவி கேட்டிருந்தால் அனைவரும் செய்திருப்பார்கள் என விளக்கம் கொடுத்தார் ரியோ. இதனால் அனிதா - ரியோ இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ரியோ, அங்கிருந்து நகர்ந்து செல்ல தைரியம் இல்லாமல் ஏன் செல்கிறீர்கள் என்றார் அனிதா. இதனால் கடுப்பான ரியோ, என்ன கூறுகிறீர்கள்? பார்த்து பேசுங்கள் என்றார்.

அதன் பின் ரியோ, அனிதாவிடம் சமாதானம் பேச சென்றார். அப்போது அனிதாவிடம், சனம் என்னுடன் சண்டை போட்டதால் வெளியேறினார் என்றாய். உன்னுடன் சண்டை போட்டவர்கள் பலர் வெளியில் போய்விட்டார்கள் என ரியோ கூறி கிண்டல் செய்தார். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, நிஷா ஆகியோர் உன்னுடன் சண்டை போட்டதால் தான் வெளியேறினார்கள் என்றார். பின்னர் ஒருவழியாக இருவரும் சமாதானமாகினர்.

இதனைத் தொடர்ந்து ஷிவானியை கன்பெக்ஷன் ரூமிற்கு பிக் பாஸ் அழைத்து பேசினார். 70 நாளாக என்ன செய்தீர்கள், யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என கேட்கப்பட்டது, அதற்கு 'நான் எலிமினேஷனில் கடைசியாக தான் காப்பாற்றப்படுகிறேன். அதை நினைத்து நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்னால் அந்த மன அழுத்தத்தை கையாள முடியவில்லை. இங்கு யாரிடம் கூறி அழுத்துவது, யாரை நம்புவது என தெரியவில்லை என அழுதார். மேலும் அம்மாவை மிஸ் செய்கிறேன்' என்றார். அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் " ஷிவானி நீங்கள் அழும் போதும் அழகாக இருக்கிறீர்கள் என்றார்" அதைக் கேட்ட ஷிவானி சிரித்துவிட்டார்.

பின்னர் ரியோவை அழைத்த பிக்பாஸ் நன்றாக விளையாடுவதாக கூறினார். மேலும் நீங்கள் இந்த 70 நாட்களில் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்றார். அதற்கு ரியோ அவரது நண்பர்கள், மனைவி மற்றும் மகளைக் கூறினார். அப்போது குறுக்கிட்ட பிக்பாஸ் உங்கள் மகள் நடக்க தொடங்கியதாகவும், முதல் முறையாக அப்பா என அழைப்பதாகவும் கூறினார். அதைக்கேட்ட ரியோ, கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இத்துடன் நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் வரும் பிரீஸ் டாஸ்க் தொடங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.இன்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறி இருக்கிறது. அதில் பாலாஜி, ஆரி, ரம்யா ஆகியோர் கோழிகளாகவும், அர்ச்சனா, அனிதா சோம், கேபி, ரியோ , ஷிவானி ஆகியோர் நரிகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் கை படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நரிகளின் வாலை கோழிகள் தொட்டுவிட்டால் அந்த சுற்றில் இருந்து அந்த நரி வெளியேற வேண்டும். மேலும் முட்டைகளை தொடாதவாறு நரியுடன் கோழி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதற்காக பிக்பாஸ் கரன்சியும் வழங்கப்பட்டுள்ளது. இறுதியில் யாரிடம் அதிக கரன்சி உள்ளதோ அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: