என் அப்பாவின் மரணம் விளையாட்டு அல்ல... கதறி அழுத அர்ச்சனா

என் அப்பாவின் மரணம் விளையாட்டு அல்ல... கதறி அழுத அர்ச்சனா

பிக்பாஸ்

தனது தந்தையின் மரணம் பற்றி பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் பேசியதால் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் அர்ச்சனா.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 35 நாட்களே மீதமிருக்கும் நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் தற்போது ஆரி, அனிதா, பாலாஜி, ரம்யா, ஷிவானி, ஆஜித், அர்ச்சனா, நிஷா, ரியோ, சோம், ரமேஷ், கேபி ஆகிய 12 பேர் உள்ளனர். இந்த வார தலைவராக அனிதா தேர்வாகியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் தனது கருத்தை யாருக்கும் அஞ்சாமல் அச்சாணி அடித்தது போல கூறுபவர்களில் அனிதாவும் ஒருவர். அனிதா முதல்முறையாக தலைவராகி உள்ளதால் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் வழங்கப்படும் நிலையில், இந்த வாரம் 'புதிய மனிதா' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.

ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

மேலும் படிக்க: ஸ்கெட்ச் போட்ட பிக்பாஸ்... நாமினேஷனில் நடந்த திடீர் மாற்றம்

அதன்படி அர்ச்சனா, சோம், கேபி, ரம்யா, ஷிவானி, ரமேஷ் இயந்திர மனிதர்களாக இருந்தனர். இன்று வெளியான முதல் ப்ரமோவில் இந்த காட்சிகள் இருந்த நிலையில், அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் அர்ச்சனா முகத்தில் முட்டையை பூச வைத்தனர். பின்னர் ஆரி ஏதோ கூற, அப்போது அர்ச்சனா கண்ணில் இருந்து கண்ணீர் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரமோவில், அர்ச்சனா கோபமாக பேசுகிறார். ஒரே நேரத்தில் 6 பேரும் வந்து பேசினால் என்ன செய்வது என ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ரியோ விளக்கம் கூற முயன்ற நேரத்தில், நீ என்னை நம்பமாட்டாய் நன்றி எனக்கூறி அறைக்குள் செல்கிறார். அவரை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என கூறி அழும் காட்சிகள் உள்ளன.மேலும் இந்த விவாதத்தின் போது குறுக்கிட்ட நிஷா, நான் தான் கூறினேன் என்கிறார். அதற்கு அர்ச்சனா யார் கூறினால் என்ன நிஷா? என கோபமாக கேட்கிறார். எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தால் அர்ச்சனாவின் தந்தை குறித்து யாரோ பேசியிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் யார் என்ற விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
Published by:Sheik Hanifah
First published: