வெளியில் சொன்னதை பிக்பாஸில் ரம்யாவிடம் கூறிய அறந்தாங்கி நிஷா

வெளியில் சொன்னதை பிக்பாஸில் ரம்யாவிடம் கூறிய அறந்தாங்கி நிஷா

பிக்பாஸ்

கடைசி வாரம் என்பதால் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

  • Share this:
18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. கடந்த வாரம் முன்னர் வரை 11 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் மீதம் இருந்த 7 பேரும் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

இதில் சோம் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அவர் நாமினேஷனில் இருந்து நீக்கப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரி சேவ் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார்.

அதன்படி இறுதி போட்டிக்குச் சென்ற இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை ஆரி பெற்றார். ஆரிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ள நிலையில், தனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கு ஆரி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து ஆரி - பாலாஜி இருவரும் ஒன்றாக அமர்ந்து நண்பர்களாக பேசிய வீடியோவை கமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார்.

அதில் பாலாஜி, ஆரியிடம் நான் பிக் பாசில் இருந்து சென்றாலும் ஏதேனும் அறிவுரை வேண்டும் பட்சத்தில் உங்களுக்கு கால் செய்து கேட்பேன் என்றார். அவர்கள் ஒருவருக்கொருவர் தற்போது நல்ல முறையில் பேசிக்கொள்வது பற்றி கமல்ஹாசனும் பாராட்டு தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பாலாஜி பைனலுக்கு செல்லும் மூன்றாவது போட்டியாளர் என கமல் அறிவித்ததும் பாலாஜி உணர்ச்சிவசத்துடன் தரையில் அடித்து அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார். பின்னர் ரியோ சேவ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ச்சியாக பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிறகு என்ன செய்ய ஆசை என சொல்லுங்கள் என அனைவரிடமும் கமல் கேட்டார்.

அப்போது முதலில் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என ரம்யா கூறினார். தனது மகள், குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்புவதாக ஆரி தெரிவித்தார். மேலும் பாலாஜி 'நான் பிக்பாஸில் இருந்து வெளியில் சென்றதும் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என இருக்கிறேன்' என தெரிவித்தார்.ரியோ குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட பின்னர் ஒரு காட்டுக்கு சென்று விட்டு வர வேண்டும் என்றும் சோம் தன் அம்மாவை பார்த்த பின்னர் தனது செல்ல நாயை வாக்கிங் அழைத்து செல்ல விரும்புவதாகவும் கூறினார். இறுதியாக ஷிவானி, ரம்யா, கேபி இருந்த நிலையில் ரம்யா சேவ் செய்யப்படுவதாகவும், ஷிவானி வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் கண் கலங்கியவாறு ஷிவானி வெளியேறினார்.

கடந்த வாரம் முழுவதும் ஷிவானி சிறப்பாக விளையாடிய நிலையில் அவர் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் ஷிவானி வெளியில் செல்லும் போது சிங்கப்பெண்ணே பாடலை பாடி மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பினர்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் முன்னதாக வெளியேறிய போட்டியாளர்களாக நிஷா, ரேகா, அர்ச்சனா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் மீண்டும் வருகை தந்துள்ளது இன்று வெளியான முதல் ப்ரமோவில் தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடுகின்றனர்.

அனைவரும் சண்டை, மோதல்களை மறந்து உற்சாகமாக உள்ளனர். பின்னர் நிஷா, ரம்யா மற்றும் அர்ச்சனா நின்று பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது நிஷா, நீங்கள் சண்டை போட்டது எல்லாம் ஸ்கிரிப்ட்டா? உங்களுக்கு சாப்பாடுலாம் வந்துவிடுமா? என்று எல்லாம் வெளியில் கேட்டனர் என்கிறார். அப்போது ரம்யா என்னது யார் சொன்னா இதெல்லாம்? எனக்கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: