ஆரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் நிஷா - மெல்ல உடையும் குரூப்பிஸம்

ஆரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் நிஷா - மெல்ல உடையும் குரூப்பிஸம்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ரமேஷூக்காக ஆரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்ததில் இருந்து குரூப்பிஸம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  அதாவது அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், கேப்ரியல்லா ஆகியோர் ஒரே குழுவாக செயல்பட்டுவதாக புகார் இருந்தது. பல்வேறு டாஸ்க்குகளிலும் அவர்கள் ஒரே அணியாக விளையாடுவது வெளிப்படையாக தெரிந்தது.

கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என அவ்வப்போது சுட்டிக்காட்டி கொண்டு வந்தாலும் தொடர்ந்து அதே தவறை செய்து வருகின்றனர். இந்த வாரம் சனம் வெளியேறிய நிலையில், இதுகுறித்து பேசிய ஆரி, பாலாஜி, அனிதா ஆகியோர் குரூப்பிஸத்தை ஒழிக்க வேண்டும் என்றனர். மேலும் அர்ச்சனாவால் தான் இந்த குரூப் உருவானது என்றும் கூறினர்.

இந்த நிலையில் இன்று ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் மனிதர்களாக ஒரு குழுவினரும், இயந்திரங்களாக மற்றொரு குழுவாகவும் பிரிய வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி அர்ச்சனா, சோம், கேபி, ரம்யா, ஷிவானி, ரமேஷ் இயந்திர மனிதர்களாகமாறி இருக்கின்றனர்.

மனிதர்கள் டீம் இயந்திரங்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளக் கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனால் ரியோ, நிஷா உடன் அர்ச்சாவிற்கு பிரச்னை ஏற்பட்டு அவர் அழுவது இன்று வெளியான இரண்டு ப்ரமோக்களில் தெரிந்தது. அன்பு குரூப்பிலேயே பிரச்னை வருவது ஆரி, பாலாஜி, அனிதாவிற்கு நல்ல விஷயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ரோபோபாக இருக்கும் ரமேஷை அழைத்து ஆரி தனியாக அமர்ந்து பேசுகிறார். அப்போது அங்கு வந்த நிஷா, ஆரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரமேஷிற்கு, ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி’ என பெயர் வைத்தது நீங்கள் தானே? அவர் எந்த வேலையும் செய்யவில்லை என நீங்கள் பார்த்தீர்களா? அவரை கண்காணிக்க பிக்பாஸ் இருக்கிறார். கேமரா இருக்கிறது என கோவமாக பேசுகிறார்.

மேலும் படிக்க: சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

இதனால் கடுப்பான ஆரி, நான் ரமேஷிடம் பேசும் போது நீங்கள் ஏன் வருகிறீர்கள், என்றும் ‘நிஷாவை பேச வேண்டாம் என நீங்கள் ஏன் கூறவில்லை என்று ரமேஷுக்கும் ஒரு கேள்வி எழுப்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளதால் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: