எனது கணவர் குடும்பம் பற்றி பேசாதீர்கள் - ஆரியை மிரட்டிய அனிதா சம்பத்

எனது கணவர் குடும்பம் பற்றி பேசாதீர்கள் - ஆரியை மிரட்டிய அனிதா சம்பத்

பிக்பாஸ் - அனிதா சம்பத்

எனது கணவர், குடும்பம் பற்றி பேச வேண்டாம் என ஆரியை மிரட்டியுள்ளார் அனிதா சம்பத்

  • Share this:
78-நாட்களைக் கடந்திருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் நேற்று அர்ச்சனா வெளியேறியதால் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று போட்டியாளர்களுக்கு ‘மாட்டினியா’ என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது

அதில் முதலில் வரும் போட்டியாளர் மற்றொருவரை அழைத்து அவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போட்டியாளர் தான் வெற்றியாளர். அவர் அங்கு இருக்கும் சீட்டில் இருக்கும் வார்த்தைக்கு தகுந்தாற்போல ஒரு கேள்வியை கேட்கவேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

அதன்படி முதலில் ரம்யாவிடம், ஆரி கேள்வி கேட்கிறார். அப்போது அடுத்த வாரம் நீங்கள் நாமினேட் செய்ய இருக்கும் இருவர் யார் என்கிறார். அதற்கு ரம்யா, ஆரி மற்றும் கேபி பெயரை கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பாலாஜி நீங்கள் பைனலில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் கூட எந்த 3 பேர் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்' என ஆரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ரியோ "அய்யா.. உண்மையிலேயே நரி இவன்தான்யா" என கூறும் காட்சிகள் இருந்தன.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், ஷிவானி, ஆரியிடம் இங்கு யார் டிமோட்டிவேட்டாக இருப்பதாக எண்ணுகிறீர்கள்? என்கிறார். அதற்கு ஆரி, அனிதாவை கூறிய ஆரி, என் வீட்டில் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியவில்லை என்றும் தனக்கு எனது வீட்டின் ஞாபகம் வந்துவிட்டது என அனிதா அழுததாகவும் கூறுகிறார்.மேலும் அனிதாவின் கணவர் குறித்து ஆரி ஏதோ கூற வரும்போது குறுக்கிட்ட அனிதா, என் அம்மா, அப்பா, பிரபா உட்பட என் குடும்ப உறுப்பினர்கள் யார் குறித்தும் ஸ்டேஜில் இருந்து பேசாதீர்கள் என்கிறார். நான் முழுவதும் பேசி விடுகிறேன். அதன் பின் ஏதேனும் தவறாக இருந்தால் சொல்லுங்கள் என ஆரி கூற, அதனை ஏற்றுக் கொள்ளாத அனிதா என் கணவர் குறித்து எதுவும் பேசாதீர்கள். அதுவரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது என்கிறார்.

அப்போது ஆரி விளக்கம் கூற முயல அதனை ஏற்றுக்கொள்ளாத அனிதா, என் கணவர், அம்மா, அப்பா குறித்து பேசாதீர்கள். பேசாதீர்கள் ஆரி" என கோபத்துடன் மிரட்டும் தொனியில் சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்க்கும் சக ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சியடைந்தவாறு உள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ஆரி ரசிகர்கள் முழுவதும் பேச விடாமல் இடையே குறுக்கிட்டு இவ்வளவு கோபமாக பேசுவதா? என அனிதாவை கடுமையாக திட்டி வருகின்றனர்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: