பிக்பாஸ் ஆரி ரசிகருக்கு அனிதா சம்பத் பளீர் பதிலடி

பிக்பாஸ் ஆரி ரசிகருக்கு அனிதா சம்பத் பளீர் பதிலடி

ஆரி | அனிதா சம்பத்

சமூகவலைதளத்தில் ஆரி ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

  • Share this:
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா தமிழ் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதைப் போல் இந்தமுறை தமிழகத்தைச் சேர்ந்த அனிதா சம்பத் பங்கேற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் குழுவாக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்த போது அதில் சேராமல் தனியாக தெரிந்த அனிதா சம்பத், வீட்டில் எழுந்த ஒவ்வொரு பிரச்னையையும் தனியாகவே சமாளித்தார்.

எதற்கெடுத்தாலும் அதிகம் பேசுகிறார், பிரச்னையை பெரிதாக்குகிறார் என்றெல்லாம் அனிதா மீது மற்ற போட்டியாளர்கள் குறை கூறினாலும், சுமங்கலிகள் முதலில் வர வேண்டும் என்ற அர்த்தத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதற்கு சரியான பதிலடி கொடுத்து கமல்ஹாசனின் பாராட்டைப் பெற்றார். அதுமட்டுமின்றி ‘இரத்தக் கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவாக பிக்பாஸ் வீட்டில் அனிதா நடித்துக் காட்டியதும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

கடந்த வாரம் ஆரி பேசும் போது, தனது குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் என பத்ரகாளியாக மாறிய அனிதாவைப் பார்த்த பார்வையாளர்கள் சிறிய விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோப்படுகிறார் என்று சமூகவலைதளங்களில் கமெண்ட் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது. அதன் எதிரொலி தானோ என்னவோ வார இறுதியில் குறைந்தவாக்குகளைப் பெற்று நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சமூகவலைதளத்தில் என்ன பதிவிடப்போகிறார் அனிதா என்று காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பையும் அளித்திருந்தனர். இந்நிலையில் ஆரியை எதிர்த்து பேசியதால் தான் உங்களை வெளியே அனுப்பினோம் என்று அவரது ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட, அதற்கு பதிலளித்த அனிதா, “ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்குத் தான் அசிங்கம். போட்டியில் நன்றாக விளையாடதவர்களை தான் வெளியே அனுப்ப வேண்டும். அதற்குத் தான் பிக்பாஸில் ஓட்டுப் போடுகிறார்கள். அதுதான் போட்டியின் விதி. உங்களைப் போன்றவர்களின் செயலால் தான் தகுதியில்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இதைக்கேட்டால் ஆரி தான் வருத்தப்படுவார். உங்களது கருத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஆரி ரசிகரின் ஓட்டுகள் எனக்கு வந்ததாக சொல்வது எனக்கு பெருமை இல்லை. அப்படி அவரது குறையை சொல்லாமல் ஆரிக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ஓட்டுகளின் மூலமாக இறுதிப்போட்டிக்குச் செல்வதை விட, நம்பிக்கையை உடைத்த அவரது செயலை சொல்லிக்காட்டி விட்டு, எனக்கே எனக்காக வாக்களித்தவர்களின் ஓட்டுகளுடன் வெளியே வந்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்.வாழ்த்துகள் ஆரி. என்னுடைய கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கம் தான். யாரும் 100% சரியானவர்கள் அல்ல.” என்று கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் குவியவே கருத்து பதிவிடும் (கமெண்ட்) ஆப்ஷனை ஆஃப் செய்துள்ளார் அனிதா சம்பத்.
Published by:Sheik Hanifah
First published: