பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அனிதா சம்பத் - ஆறுதல் கூறும் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அனிதா சம்பத் - ஆறுதல் கூறும் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் அனிதா

பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்திருக்கும் அனிதா சம்பத்துக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

  • Share this:
கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது ரியோ, ஆரி, பாலாஜி , சோம், ரம்யா, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் முதல் நாள் அர்ச்சனா, நிஷா, ரேகா, ஜித்தன் ரமேஷ் வந்திருந்த நிலையில், நேற்று சனம், ஆஜீத், சம்யுக்தா, வேல்முருகன் என ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் வெளியில் நடந்த விஷயங்களை கூறி நிகழ்ச்சியை கலகலப்பூட்டினர்.

முதலில் பேசிய வேல்முருகன், தனது வீட்டில் கலாய்த்தது குறித்து பேசினார். 18 பேரில் ஒரு கணக்கிற்கு நீங்கள் வீட்டுக்குள் போனீர்களா என அவர் மனைவி கேட்டதாகவும், வெளியே சென்றபோது 'வருத்தப்படாதீங்க வந்த வரை சிறப்பு' என என் மனைவி சொன்னபோது எனக்கு அசிங்கமாகி விட்டது என்றும் கூறினார்.

மேலும் உங்களை காணவில்லை என சில நாட்களில் தேடுவோம். பேசுபவர்கள் அருகிலாவது சென்று நிற்க வேண்டும். கூட்டமாக எல்லோரும் இருந்தாலும் நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள். தூரத்தில் தனியாக அமர்ந்திருப்பீர்கள் என மோசமாக அசிங்கப்படுத்தியதாக வேல்முருகன் கூறினார்.

இதனைக் கேட்ட ஹவுஸ் மேட்ஸ் விழுந்து விழுந்து சிரித்தனர். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசுமாறு கூறப்பட்டது. முதலில் நிஷாவை நிஷு என செல்லமாக அழைத்த பிக்பாஸ், செம்ம வெயிட் லாஸ் போல.. டயட்டா என்று கேட்டு கலாய்த்தார். இதனால் ஹேப்பியான நிஷா, தேங்க்யூ பிக்பாஸ் போறதுக்குள்ள ஐ லவ் யூன்னு சொல்லிடுங்க என்றார். இதனைக் கேட்ட பிக் பாஸ் ஐ லவ் யூ கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சியடைந்த நிலையில், நிஷா துள்ளி குதித்து மகிழ்ந்தார்.

பின்னர் பிக்பாஸ், நிஷா காமெடி நல்லா இருந்ததா? என்று கூறி கலாய்த்தார். பின்னர் ஒவ்வொருவராக வந்து பேசினர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த மகிழ்ச்சியான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் அர்ச்சனா, நிஷா, ரியோ, சோம், கேபி ஆகியோர் அதிகம் இருந்தனர். இதனால் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது. அனிதா தந்தையின் இழப்பு காரணமாக வர வாய்ப்புகள் இல்லை என பேசப்பட்ட நிலையில், தற்பொழுது அனிதா இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளது இன்று வெளியான முதல் ப்ரமோவில் தெரிகிறது.

அனிதா கண் கலங்கியவாறு பிக்பாஸ் வீட்டுக்குள் வர மற்ற போட்டியாளர்கள் அனிதாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். வேல்முருகன் நாங்கள் தான் உன் அப்பா என கூறுகிறார். தைரியமாக இருக்குமாறு ஹவுஸ் மேட்ஸ் ஆறுதல் தெரிவிக்கும் நிலையில், ரேகா, அர்ச்சனா, ரியோ , கேபி ஆகியோர் அனிதாவை அரவணைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னர் அனைவரும் நின்று பேசி கொண்டிருக்கையில் கைதட்டி உற்சாகம் அளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதால் யார் வெற்றி பெறப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: