கமல்ஹாசனை குறை கூறிய அனிதா சம்பத் - கடுப்பான ரசிகர்கள்

கமல்ஹாசனை குறை கூறிய அனிதா சம்பத் - கடுப்பான ரசிகர்கள்

அனிதா சம்பத் | கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு பக்கமாக பேசுகிறார் என்று அனிதா சம்பத் தெரிவித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

  • Share this:
கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தீபாவளி என்பதால் யாரும் எவிக்‌ஷன் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து தீபாவளி கொண்டாட்டத்துடன் பிக்பாஸ் வீடு களைகட்டியது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்தவை குறித்து நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடினார். அப்போது ஆரி கேப்டன் பதவி ஏற்று சிறப்பாக செயல்பட்டதாக கமல்ஹாசன் பாராட்டினார். இதையடுத்து ஆரி, அனிதா சம்பத், சனம் ஆகியோரது எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரி இருப்பதாக ஒரு சில போட்டியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதை மறுத்த அனிதா, கடந்த வாரம் ரியோவுடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கமல்ஹாசனிடம் பேசியதையே பேச ஆரம்பித்தார். அதற்கு உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அனிதாவிடம் கூறினார் கமல்.

மேலும் படிக்க: பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணம்.. சேரன் உட்பட பலர் இரங்கல்

கமல்ஹாசன் தன்னிடம் இப்படி நடந்து கொண்டதை சனம் ஷெட்டியிடம் கூறி குறைபட்டுக் கொண்ட அனிதா சம்பத், கமல்ஹாசன் ஒரு பக்கமாக பேசுகிறார் என்றும் தன்னை பேசவிடவில்லை என்றும் குற்றம்சாட்டினார். முன்னதாக அனிதா சம்பத் தன்னை மற்ற போட்டியாளர்கள் பேசவிடவில்லை என்று கூறிய போதும், சுமங்கலி விவகாரத்தில் மற்ற போட்டியாளர்கள் முகம் சுழித்த போதும் அனிதா சம்பத் செய்தது சரி தான் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

எனவே கமல்ஹாசன் மீது அனிதா சம்பத் வைக்கும் குற்றச்சாட்டு சரியானது இல்லை என்று சமூகவலைதள பதிவுகளில் தெரிவிக்கும் நெட்டிசன்கள், கடைசியில் கமல்ஹாசனையே குறை கூறத் தொடங்கிவிட்டார் அனிதா என்றும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அனிதா சம்பத், “நான் பிரம்மித்துப் பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கதில் நிற்கிற வாய்ப்பு. உலகத்து சினிமாக்காரர்கள் எல்லாம் வாய் பிளந்து வியந்த ஒரு நடிகன் என் பெயரை உச்சரிக்கப் போகிற ஒரு வாய்ப்பு.

அவர் பக்கதில் நின்று பேசி இருக்கேன் என்று என் அடுத்த சந்ததியிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுவதெல்லாம் வேற விஷயம். முதலில் இந்த வாய்ப்பு என்பதே அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இதை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என்று தான் இந்த முடிவு” என்று கமல்ஹாசனை புகழ்ந்து கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: