பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் அர்ச்சனாவின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் அர்ச்சனாவின் முதல் பதிவு

மகளுடன் பிக்பாஸ் அர்ச்சனா

பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஜாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தாயை சந்தித்துள்ளார்.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுசித்ரா, அர்ச்சனா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க எண்ணிக்கை 18 ஆனது. 75-நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய 8 பேர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று 9-வது போட்டியாளராக அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

அர்ச்சனா வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்கள் எதிர்பார்க்காத நிலையில் அவரை வெளியேற்றி பெரிய ட்விஸ்ட் வைத்தார் பிக்பாஸ். இதுவரை வெளியேறிய போட்டியாளர்களிலேயே அர்ச்சனா மட்டுமே வீட்டின் தலைவராக இருந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளார். வீட்டின் தலைவராக இருந்த அர்ச்சனாவிடம் தனக்குப் பதிலாக ஒருவரை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட போது, பாலாஜிக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார் அர்ச்சனா.

பெரும்பாலான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது கண்ணீருடன் விடை பெறுவார்கள். ஆனால் கடைசி நாளில் மகிழ்ச்சியுடன் அனைவரையும் ஆரத்தழுவி அன்பை பரிமாறி புன்னகையுடன் வெளியேறிய அர்ச்சனா, அன்பால் இந்த வீட்டை வென்று விட்டேன் என்ற நம்பிக்கை இருப்பதாக கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

அர்ச்சனா வீட்டை விட்டு போன பின்னர் தாய்ப்பறவையை இழந்த பறவைகளாக சோம்,ரியோ, அர்ச்சனா ஆகியோர் இருக்க வீடு வந்து சேர்ந்த அர்ச்சனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகளை சந்தித்துள்ளார். தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஜாரா, மை பாஸ்ஸி குமாரு திரும்ப வந்துவிட்டார். கடவுள் இருக்கான் குமாரு.. அன்பு உண்மைதான் குமாரு என்று எழுதியுள்ளார்.
அர்ச்சனாவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நன்றி தெரிவித்துளார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: