‘யாருக்கும் சொம்பு தூக்காம உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன்’ பிக்பாஸ் பற்றி அனிதா சம்பத் விளக்கம்

‘யாருக்கும் சொம்பு தூக்காம உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன்’ பிக்பாஸ் பற்றி அனிதா சம்பத் விளக்கம்

பிக்பாஸ் அனிதா சம்பத்

பிக்பாஸ் வீட்டில் இருந்த 84 நாட்கள் தான் உண்மையாக இருந்ததாக அனிதா சம்பத் விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத் கடந்த வார இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்று 10-வது போட்டியாளராக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனது பங்களிப்பு பற்றியும் நீண்ட விளக்கத்தை எழுதியுள்ளார் அனிதா.

  அதில் அவர் கூறியிருப்பதாவது, “இதுக்கு மேல என்ன வேணும். யாருக்கும் சொம்பு தூக்காம 84 நாட்கள் உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் படியாக (No safe game) விளையாடவில்லை. யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள சோஷியல் மீடியா பக்கங்கள் வைத்திருக்கவில்லை. மற்ற போட்டியாளர்களை அசிங்கப்படுத்தும் விதமான கருத்துகள் என்னுடைய சமூகவலைதள பக்கங்களில் இல்லை. எனக்கு நெருக்கமானவர்களின் தவறுகளைக் கூட சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

  இறுதி வரைக்கும் இருந்தேன்னு சொல்லிக்கிற பெருமைய விட. இருந்த வரைக்கும் விளையாட்ட ட்விஸ்ட் பண்ணதுல எனக்கும் பங்கு இருக்குனு சொல்லிக்கிறத ரொம்ப பெருமையா நெனக்கிறேன். எனக்கு கடைசி வரைக்கும் ஓட்டு போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி. அழுகையும் கோபமும் எல்லாருக்கும் வரும்.

  நீங்க பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனாதான் அது புரியும். ஒரு உணர்ச்சிவசப்படும் மனிதர் அவ்ளோ மன அழுத்தத்துடன் வீட்ட சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு. சிக்ஸ் அடி சிக்ஸ் அடினு வீட்டுக்குள்ள இருந்து கத்தலாம். ஆனா சிக்ஸர் அடிக்கிறதோட கஷ்டம் பேட்ஸ்மேன்க்கு தான் புரியும். நடுநிலை கொண்ட பார்வையாளர்கள் எல்லாருக்கும் மிக்க நன்றி..

  உங்களுடைய கருத்துகள், பதிவுகளை பாத்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய விளையாட்டின் மீது எனக்கிருந்த நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நான் இப்படிதான்.உள்ளேயும் வெளியேயும். பார்வையாளர்களை இம்ப்ரெஸ் பண்ண உடனே சாரி கேட்டு நடிக்க தெரியாது. போலியா சிரிக்க தெரியாது. கோபத்த எவிக்‌ஷன்ல இருந்து தப்பிக்க அடக்க தெரியாது. நான் நானா இருந்தேன்.
  ரசிகர் பக்கம் என்ற பெயரில் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்களை காயப்படுத்தி, அவர்களது குடும்பத்தை தாங்க முடியாத இழிவான வார்த்தைகளால் திட்டிய அனைவருக்கும்.. உங்களுக்கு காட்டுறது வெறும் ஒரு மணி நேரம். நாங்க பாக்குறது 24 மணி நேரம்.எவரும் சரியானவர் அல்ல. எல்லோரும் எல்லா நேரத்திலும் சரியாக இருக்க முடியாது” இவ்வாறு அனிதா சம்பத் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sheik Hanifah
  First published: