பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷின் முதல் போஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷின் முதல் போஸ்ட்

ஜித்தன் ரமேஷ்

தனக்கு ஆதரவு தெரிவித்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்

  • Share this:
பிக்பாஸ் வீட்டில் எனக்கு அளித்த ஆதரவைப் போல் இனி வரவிருக்கும் எனது படங்களுக்கும் மக்களாகிய உங்களது ஆதரவு வேண்டும் எனக் கோரியுள்ளார் நடிகர் ஜித்தன் ரமேஷ்.

அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக சென்றவர் பிரபல நடிகர் ஜித்தன் ரமேஷ். ஆர்.பி.சவுத்ரி என்ற பிரபல தயாரிப்பாளரின் மகனாக சக போட்டியாளர்களால் பார்க்கப்பட்டாலும், என்னை அப்படி யாரும் பார்க்க வேண்டாம் என்று ஒரு சில வாரங்களிலேயே வெளிப்படையாகக் கூறினார். ஆனாலும் ஒரு சில போட்டியாளர்கள் ஜித்தன் ரமேஷ் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கவும் தவறவில்லை.

70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ரமேஷ், கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷனில் முதல் நபராக வெளியேறினார். இனி திரைத்துறையில் உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என வாழ்த்தி அனுப்பினார் கமல்ஹாசன். மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போடாமல் இருந்ததை பிக்பாஸ் மேடையில் குறிப்பிட்டு பேசி விடை பெற்ற ஜித்தன் ரமேஷ், தனக்கு ஆதரவு தெரிவித்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “பிக்பாஸ் வீடு ஒரு புது அனுபவம் தான். 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறேன். மக்களாகிய உங்களது ஆதரவு இல்லாமல் நான் அவ்வளவு நாட்கள் இருந்திருக்க முடியாது. முதலில் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பிக்பாஸ் வீட்டில் எனக்கு அளித்த ஆதரவைப் போல் இனி வரவிருக்கும் எனது படங்களுக்கும் உங்களது ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: