மறக்க முடியாத துயரம் குறித்து பேசிய ரேகா - கண்கலங்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸின் கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது தான் சொல்ல மறந்ததை கண்ணீருடன் தெரிவித்துள்ளார் நடிகை ரேகா.

பிக்பாஸ் ரேகா
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 5:32 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். அவர்களை பார்த்த போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அனைவரும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.
பின்னர் வேடிக்கையான டாஸ்க்குகள் வழங்கப்பட்டன. அதில் ஆண்கள், பெண்கள் இரு அணிகளை பிரிந்து விளையாடியதில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இன்றைய முதல் ப்ரமோவில் சம்யுக்தா, சுசித்ரா உள்ளே சென்ற காட்சிகள் இருந்தன. இரண்டாவது ப்ரமோவில், சனம், ஆஜித், வேல்முருகன் வந்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆரி - ரியோ இடையே வாக்குவாதம் நடைபெறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ரேகா தனது வாழ்வில் மறக்க முடியாத துயரத்தை கூறும் காட்சிகள் உள்ளன.
அதில், அனைவரும் அமர்ந்திருக்க அவர்கள் முன் நின்று பேசும் ரேகா, கடந்த வந்த பாதை டாஸ்க்கில் அனைவரும் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பேசினார்கள். ஆனால் நான் அப்போது இந்த விஷயத்தை கூறவில்லை என தனது தந்தை குறித்து பேசுகிறார். அப்போது நான் நடிகையாக வந்ததில் இருந்து என் அம்மா என்னுடன் இருந்தார்.
அதனால் என் அப்பாவை கவனிக்கவில்லை. அப்பாவை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எனக்குள் உள்ளது. என்னுடைய அப்பா இறந்துவிட்டார். இது எனக்கு தற்போதுவரை குற்ற உணர்ச்சியாக உள்ளது என கதறி அழுகிறார். அதனை பார்த்து அர்ச்சனா, சனம், சம்யுக்தா ஆகியோரும் கண் கலங்குகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். அவர்களை பார்த்த போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அனைவரும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.
பின்னர் வேடிக்கையான டாஸ்க்குகள் வழங்கப்பட்டன. அதில் ஆண்கள், பெண்கள் இரு அணிகளை பிரிந்து விளையாடியதில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இன்றைய முதல் ப்ரமோவில் சம்யுக்தா, சுசித்ரா உள்ளே சென்ற காட்சிகள் இருந்தன.