பாலாஜிக்கு கண்ணை மறைக்கும் காதல் - சக போட்டியாளர் குற்றச்சாட்டு

பாலாஜிக்கு கண்ணை மறைக்கும் காதல் - சக போட்டியாளர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு அவரது காதல் கண்ணை மறைப்பதாக சக போட்டியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
தீபாவளி என்பதால் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்கள் குதூகலமாக இருந்தனர். சனிக்கிழமை நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார். நிஷா பட்டிமன்றத்தில் பேசுவது போல காமெடியாக பேசி காட்டினார்.

கேப்ரில்லா அனைவரும் எப்படி டான்ஸ் ஆடுவார்கள் என ஆடி காட்டினார். ரியோ மற்றும் அர்ச்சனா விவாத மேடை டாஸ்க் போன்று வேடிக்கையாக செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து ரியோ - அனிதா பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சனம் ஷெட்டி உணவை வீணாக்கியது மற்றும் அதற்காக ஆரியிடம் சண்டை போட்டது பற்றியும் கமல் கேள்வி எழுப்பினார்.

குப்பை தொட்டியில் உணவை கொட்டியது யார் என ஆரி பல முறை கேட்டதற்கு பிறகு சனம் 'யாரென்று தெரியவில்லை. நானா கூட இருக்கலாம்' என பதில் அளித்து இருந்தார். இது பற்றி பேசிய கமல் ‘சாரி' என சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி பெரிதாக்கிவிட்டார் என கமல் தெரிவித்தார்.

மேலும் 'நானா இருக்கலாம் என்பது நல்ல பதில், நான் கத்துக்கணும் உங்க கிட்ட இருந்து' என கமல், சனத்தை வெளிப்படையாகவே கலாய்த்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது போட்டியாளர்களுக்கு கொடுத்த செடியை அனைவரும் காட்டினார்கள்.

அப்போது ஆரி, ஷிவானி உள்ளிட்டோர்களின் செடி அழுகி விட்டது என கூறப்பட்டது. ரமேஷ், ரம்யா ஆகியோர் தங்களது செடியை செழிப்பாக வைத்திருந்த நிலையில், ரம்யா அவரதுசெடி மட்டுமின்றி அனைவரது செடியையும் தனது குழந்தை போல பராமரித்து வருவதாக கூறினார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் மற்றும் கமல் ரம்யாவை பாராட்டினார்கள்.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. அதில் வீட்டில் இருந்து வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களை தகுந்த காரணத்தை சொல்லி நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் அனிதா மற்றும் சுசித்ராவை நாமினேட் செய்திருக்கிறார்கள்.ரியோ, நிஷா, அர்ச்சனா, சம்யுக்தா ஆகியோர் அனிதாவையும், ரம்யா, ரமேஷ், ஷிவானி உள்ளிட்டோர் சுசித்ராவை நாமினேட் செய்கிறார்கள்.
சோம், பாலாஜியை நாமினேட் செய்தார். ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்வதாக தெரிகிறது. பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணம் கூறிய நடிகர் ஆரி, காதல் பாலாஜியின் கண்ணை மறைக்கிறது என்றும் கூறினார்.
Published by:Sheik Hanifah
First published: