சோம், ரியோவை வீழ்த்த ஆரி - பாலாஜி போடும் அதிரடி ப்ளான்

சோம், ரியோவை வீழ்த்த ஆரி - பாலாஜி போடும் அதிரடி ப்ளான்

பிக் பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். என்ன டாஸ்க் கொடுத்தாலும் அதில் ஒரு சண்டை இருக்கும். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு 'B for Ball, C for Catch' எனும் ஒரு புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும். பைப் மூலமாக வரும் பந்தை கேட்ச் பிடிக்கவேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். மூன்று அளவுகளில் பந்துகள் வழங்கப்படும், அதன் அளவுகளை அடிப்படையில் 5, 10 மற்றும் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும், நீங்கள் பிடிக்கும் பந்துகள் அடிப்படையில் உங்கள் அணிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இதனையடுத்து இரு அணிகளை சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பந்துகளை பிடிக்கும் காட்சிகள் முதல் ப்ரமோவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் இந்த டாஸ்க்கில் நடைபெறும் மோதல் காட்சிகள் உள்ளன. முதலில் பந்து வரும் வேளையில் பாலாஜி, சோம் முண்டியடித்து பந்துகளை பிடிக்க முயல்கின்றனர் அப்போது சோம், பாலாஜி தள்ளி விட்டதாகக் கூறுகிறார். அதற்கு விளக்கம் அளிக்கும் பாலாஜி நீங்கள் தள்ளி விட்டு என்னை குறை கூறாதீர்கள் என்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆரி, பாலாஜி தனியாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது நீங்கள் பந்து வரும் இடத்திற்கு நேராக நின்று விடுங்கள். நான் சென்றால் தள்ளி விடுகிறேன் என்கிறார்கள் என பாலாஜி கூறுகிறார். அதற்கு ஆரி, நான் நின்ற நேரத்திலும் ரியோ அணியினர் ஒரு ஸ்டேடர்ஜியை பயன்படுத்தினர். என்னை திசைதிருப்ப முன்னால் போ என கூறிக்கொண்டே இருந்தார். சண்டை போட வேண்டாம் என எதுவும் கேட்கவில்லை என்றார். எதுக்கு விளையாட வேண்டும் என தோன்றுகிறது என பாலாஜி கூறுவது வீடியோவில் உள்ளது.

இதனிடையே மூன்றாவது ப்ரோமோ அன்சீன் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென டாஸ்க்குக்கான ஒலி (பஷர்) அடிக்கிறது. அப்போது டாஸ்க் தொடங்கிய நிலையில் ஆரி, சோம், ரியோ ஆகியோர் பந்தை போட்டி போட்டுகொண்டு பிடிக்க முயல்கின்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ரியோ கீழே விழுந்து விடுகிறார். அதனால் ஏன் இப்படி விளையாடுகிறீர்கள் என சோம், ஆரியிடம் கேள்வி எழுப்பிகிறார். அதற்கு ஆரி எப்படி வேண்டுமானாலும் அடித்து விளையாடலாம் என்றால் விளையாடலாம் என்கிறார். அடித்து விளையாடலாம் என கூறினால் என்ன அர்த்தம் என சோம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் இன்று தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: