அர்ச்சனாவுக்கு சவால் விடுத்த ஆரி - கடுமையான வாக்குவாதம்

அர்ச்சனாவுக்கு சவால் விடுத்த ஆரி - கடுமையான வாக்குவாதம்

பிக்பாஸ்

பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஸ்பெஷல் பவரைப் பெற கடுமையான போட்டி நிலவி வருவது ப்ரமோ வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று வெளியான முதல் ப்ரமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் பாதிபேர் முட்டையைப் பாதுகாக்கும் கோழிகளாகவும், பாதி பேர் அதை திருடும் நரிகளாகவும் மாறி இருக்கின்றனர்.

கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் கை படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நரிகளின் வாலை கோழிகள் தொட்டுவிட்டால் அந்த சுற்றில் இருந்து அந்த நரி வெளியேற வேண்டும். மேலும் முட்டைகளை தொடாதவாறு நரியுடன் கோழி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதற்காக பிக்பாஸ் கரன்சியும் வழங்கப்படுகிறது. இறுதியில் யாரிடம் அதிக கரன்சி உள்ளதோ அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், டாஸ்க்கின் போது ஆரியுடன், அர்ச்சனா, ரம்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. ஆரியின் குழுவினர் முட்டையைத் தொட அர்ச்சனா குழுவினர் ஒன்றாக சேர்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏன் அறிவிக்காமல் ஒன்றாக வருகிறீர்கள் என ஆரி கோபமாக பேசுகிறார்.அப்போது அர்ச்சனா லாஜிக்காக ஒரு முட்டையை எடுக்க நரிகள் குழுவாகத் தான் வரும் என விளக்குகிறார். இந்த வாக்குவாதத்தில் குறுக்கிட்ட ரம்யா, அறிவித்துவிட்டு நரிகள் வர வேண்டும் என பிக்பாஸ் விதிகளில் கொடுக்கவில்லை என்கிறார். மேலும் அர்ச்சனா எப்படி விளையாட வேண்டும் என கூறுங்கள் என ஆரியிடம் கேட்க, அதற்கு ஆரி நான் எப்படி விளையாடப் போகிறேன் என பாருங்கள் என சவால் விடுகிறார்.

இதனால் வழக்கம் போல பிக்பாஸ் டாஸ்க் என்ற பெயரில் கொளுத்திப் போட்டிருப்பது தெரிகிறது. வழக்கமாக ரம்யா ஆரி குழு என்றாலும் இன்றைய டாஸ்கில் அர்ச்சனாவின் நரிகள் அணியில் இருப்பதால் ஆரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். மேலும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று ஸ்பெஷல் பவரைப் பெறும் அந்த நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: