பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஆஜித்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஆஜித்

பிக்பாஸ் ஆஜித்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்டுள்ளார்

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 8 பேர் களத்தில் உள்ளனர். இந்த வார நாமினேஷனில் கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ஆஜித் ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் இந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியேற இருக்கும் எபிசோட் நாளை ஒளிபரப்பாகும். ஆரம்பத்திலிருந்தே ஆஜித்தின் குரல் பிக்பாஸ் வீட்டில் குறைவாக ஒலித்ததாக சக போட்டியாளர்களே குறை கூறி வந்தனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ரீ பாஸை வென்ற ஆஜித் ஒரு வாரம் எவிக்‌ஷனிலிருந்து தப்பித்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்த ஆஜித்தின் அம்மாவும், சகோதரியும் ஆஜித் அமைதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து விழித்துக் கொண்ட ஆஜித், தனது விளையாட்டை ஆட ஆரம்பித்த சமயத்தில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இன்னும் நிகழ்ச்சி முடிவடைய இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் பாலா, ஆரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆரி டைட்டில் வெல்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேம் என்று தெரிவித்த பாலாஜி, இதுவரை டைட்டில் வென்றவர்கள் அனைவரும் அமைதியாக கடலை சாப்பிட்டவர்கள் தான் என்று குற்றம்சாட்டினார்.

கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, பாலா, ஆரி ஆகிய 7 பேர் தற்போது களத்தில் இருக்கும் நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஏழு பேரில் நடிகர் ஆரிக்கு அதிகமான ஆதரவு இருப்பதையும் சமூகவலைதளங்களில் காண முடிகிறது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: