நாமினேஷன் லிஸ்ட் ரெடி... இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?

நாமினேஷன் லிஸ்ட் ரெடி... இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  • Share this:
இறுதிக்கட்டத்துக்கு நெருங்கி வரும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் அர்ச்சனா கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார். தற்போது ஆரி , அனிதா, ரம்யா, ஆஜித், கேபி, ஷிவானி, பாலாஜி, ரியோ, சோம் ஆகிய 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் வழக்கம் போல நாமினேஷன் நடைபெற்றது.

கன்பெஷன் அறையில் நடைபெற்ற இந்த நாமினேஷனில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருவரை நாமினேட் செய்தனர். பின்னர் நாமினேஷன் லிஸ்டை பிக்பாஸ் காரணங்களுடன் அறிவித்தார். அப்போது தவறா கேம் விளையாடுகிறாங்க, நெகட்டிவிட்டி கொடுக்குறாங்க, மற்றவர்களை குறை கூறி கேம் விளையாடுகிறார், ஈடுபாடு குறைவாக இருக்கு, இந்த வீட்டில் எதுவும் பெருசா பண்றதில்லை, பங்களிப்பு குறைவாக உள்ளது, டாஸ்கில் கோபப்பட்டு ஈடுபாடு காட்டவில்லை என்ற காரணங்களால் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அனிதா, ஆரி, ஷிவானி, கேபி, ஆஜித் என அறிவித்தார். இந்த 5 போட்டியாளர்களில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். அதில் ஆஜித் அல்லது அனிதா வெளியேற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து "மாட்னியா" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் மற்றொருவர் கையை அடிக்க வேண்டும் என்றும், அடி வாங்கிய நபரிடம் வெற்றி பெற்றவர் ஒரு கேள்வியை கேட்கலாம் என்றும் கூறப்பட்டது. அந்தக்கேள்வியானது சீட்டில் இருக்கும் வார்த்தையை மையப்படுத்தி இருக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். அப்போது இந்த வீட்டில் டிமோட்டிவேட்டாக இருப்பவர் யார் என ஆரியிடம், ஷிவானி கேள்வி எழுப்பினார்.

அப்போது பதில் அளித்த ஆரி, அனிதாவை கூறினார். அதற்கான காரணம் குறித்து விளக்கிய ஆரி, யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது, கோபப்படக்கூடாது என எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் நான் அதனை பின்பற்றவில்லை. என் அப்பா, அம்மா என்ன நினைப்பார்கள் என அனிதா கவலைப்பட்டதாகக் கூறினார்.

மேலும் அனிதாவின் கணவர் பெயரை ஆரி உச்சரித்த உடனே பொங்கிய அனிதா 'என கணவர் பெயரை ஸ்டேஜில் சொல்லாதீர்கள்' என கோபத்துடன் கத்தினார். 'நான் எதுவும் தவறாக சொல்லவில்லை என ஆரி விளக்கம் கூற முயன்ற போது மீண்டும் குறுக்கிட்ட அனிதா மிகவும் ஆவேசமாக என் கணவர், குடும்பத்தினர் பற்றி பேசாதீர்கள் என கத்தினார். பின்னர் அனிதா இதுகுறித்து ரம்யாவிடம் சொல்லி அழுதார்.நேற்றைய எபிசோடில் அனிதாவின் கோபம் ஹைலைட்டான ஆன நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு 'B for Ball, C for Catch' எனும் ஒரு புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும். பைப் மூலமாக வரும் பந்தை கேட்ச் பிடிக்கவேண்டும் என்பது தான் இந்த டாஸ்க்.

மூன்று அளவுகளில் பந்துகள் வழங்கப்படும். அதன் அளவுகளின் அடிப்படையில் 5, 10 மற்றும் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். நீங்கள் பிடிக்கும் பந்துகள் அடிப்படையில் உங்கள் அணிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதனையடுத்து இரு அணிகளை சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பந்துகளை பிடிக்கின்றனர். ஆரி மற்றும் பாலா உள்ளிட்டவர்கள் ஒரு அணியிலும் ரியோ மற்றொரு அணியிலும் இருக்கின்றனர்.

அப்போது ஆரி, ரியோவிடம் ஏதோ கேட்க, அதற்கு பதில் அளித்த ரியோ, "எங்களை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்க டீமில் முதலில் கேளுங்கள். பாலா நிற்கிறார். கரெக்டாக தெரிகிறது இங்கு தான் பால் வருகிறது. அவருக்கு பின் ஆஜித் நிற்கிறார். நான் எங்கே நிற்பேன்" என கோபமாக கேட்டிருக்கிறார். பாலாஜி உயரமாக இருப்பதால் பால் வந்து விழும் இடத்திற்கு அருகிலேயே நின்றுகொண்டு இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: