பிக்பாஸ்: காப்பாற்றப்பட்டார் கவின் - கமல் அறிவிப்பு!

கவின்

இந்தவாரம் வெளியேற்றப்படுவோர் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்து நடிகர் கவின் காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார் ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், சரவணன், சாக்‌ஷி அகர்வால், கவின், மீரா மிதுன், அபிராமி உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இயக்குநர் சேரன் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார்.

  அதேவேளையில் இயக்குநர் சேரன் மீது வீண்பழி சுமத்திய மீரா மிதுனுக்கும் குறும்படம் காட்டினார். தொடர்ந்து போட்டியாளர்களிடையே உரையாடிய கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரகசிய அறையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் இந்தவாரம் வெளியேற்றப்படுவோர் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

  ஆனால் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரமோ வீடியோவில் யாரைக் காப்பாற்றலாம் என்று அரங்கிலிருக்கும் பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார் கமல்ஹாசன். அதற்கு, கவின் என்று அனைவரும் ஒரு மித்த குரலில் கூறுகின்றனர். எனவே இரண்டாவது முறையாக நாமினேட் செய்யப்பட்டிருக்கும் கவின் எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published: