HOME»NEWS»ENTERTAINMENT»bigg boss suresh chakravarthy emotional note on his 30th wedding anniversary scs

30-வது திருமண நாளில் பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் உணர்ச்சிப் பதிவு!

”30 வருடங்கள் என்னுடன் வாழ்வது எளிதல்ல, நீ அதைச் செய்துள்ளாய். நன்றி சிக்கு.”

30-வது திருமண நாளில் பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் உணர்ச்சிப் பதிவு!
மனைவியுடன் சுரேஷ் சக்ரவர்த்தி
  • Share this:

மூத்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான சுரேஷ் சக்ரவர்த்தி தனது உணவகத்தை நடத்த வெளிநாடு சென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பினார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4'-ல் அவர் ரீ எண்ட்ரியானார். அதில் போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் தனது விளையாட்டு மூலம் ஆச்சரியப்படுத்தி, பிரபலமானார்.

வெகுநாட்கள் பிக் பாஸ் இல்லத்தில் இருக்க ஆசைப்பட்டார். இருப்பினும், 35 வது நாளில் 'பிக் பாஸ் 4'-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரது ஃபாலோயர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையில், இன்று சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீகலா தங்களது 30-வது திருமணநாளைக் கொண்டாடுகின்றனர். இதனால் தாங்கள் ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொண்ட, படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுரேஷ்.

”30 வருடங்கள் என்னுடன் வாழ்வது எளிதல்ல, நீ அதைச் செய்துள்ளாய். நன்றி சிக்கு. 30-வது திருமண நாள் வாழ்த்துக்கள். லவ் யூ" என உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். சுரேஷின் இந்த பதிவையடுத்து, அவருக்கு திருமணநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: