• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிஸ்னி ஸ்டைலில் வெளியான பிக்பாஸ் பிரபலத்தின் திருமண அழைப்பிதழ்

டிஸ்னி ஸ்டைலில் வெளியான பிக்பாஸ் பிரபலத்தின் திருமண அழைப்பிதழ்

டிஸ்னி ஸ்டைலில் தனது திருமண அழைப்பிதழை பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி வெளியிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டிஸ்னி ஸ்டைலில் தனது திருமண அழைப்பிதழை பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த முறை நடந்த பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தார். இவரும் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் பரவி வைரலானது.

இதையடுத்து சுஜாவருணியின் பிறந்த நாளானன்று அவரது காதலர் திருமண தேதியை வெளியிட்டிருந்தார். அதில், ``11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரைக்கும் பிரியாமல், அன்புடன் இருப்போம்” என்று கூறியிருந்தார்.



இந்நிலையில் தற்போது தங்களது திருமண அழைப்பிதழை சுஜா வருணி மற்றும் அவரது காதலர் சிவகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அந்த அழைப்பிதழ் டிஸ்னி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது காதல் கதை, டிஸ்னி கதைகளில் வருவது போல் கூறப்பட்டுள்ளது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: