’முட்டாள் தனமான பிராண்ட்’ கமலின் கதர் கான்செப்ட்டை விமர்சித்த சுசித்ரா

’முட்டாள் தனமான பிராண்ட்’ கமலின் கதர் கான்செப்ட்டை விமர்சித்த சுசித்ரா

சுசித்ரா

தனக்கு ’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் எனக் காண்பிக்க சொன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ரா இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்திய கதர் உடையை இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார் சுசித்ரா.

    இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய முறை தான் அணிந்து வந்த ஆடைகளை ‘கதர்’ என குறிப்பிட்டார் கமல். இதன் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் நெசவாளர்களின் நலன் கருதி, கமல்‘House Of Khaddar’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதோடு போட்டியாளர்கள் அனைவருக்கும் கதர் ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தார்.

    Bigg Boss Suchitra allegations on kamal haasan's kaddhar concept

    இந்நிலையில் தனக்கு ’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் எனக் காண்பிக்க சொன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ரா இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கி விட்டார். ஆனால் அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், “கைப்பாவை மாஸ்டர் என்றால் அது கமல் தான். அவரின் முட்டாள் தனமான பிராண்ட் கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை. அதை என்னை அணிய வைத்து, அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள். என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல். மோசமான குணம் கொண்டவர். ஒரு ரூபா செலவு பண்ணல. தீந்து போச்சு கணக்கு. அவர் எதுக்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: