ரம்யா பாண்டியன் குறித்து பிக் பாஸ் சோம் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. இதில் கலந்துக் கொண்டவர்களில் மாடலும், நடிகருமான சோம் சேகரும் ஒருவர். யார் மனதையும் புண்படுத்தாத சோம், இளகிய மனம் கொண்டவர் என்பது பல தருணங்களில் தெரிந்தது.
தனது செல்லப்பிராணி குட்டு மீது அதிக அன்பு வைத்திருக்கும் சோம், பல இடங்களில் அதைப்பற்றி பேசினார். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் என்ற போது கூட, அதற்குத்தான் கடிதம் எழுதினார் சோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேட்டை வைத்திருந்ததற்காக அவரது நண்பர்கள் அவரை செல்லமாக கிண்டல் செய்து வந்தனர்.

சோம் பகிர்ந்துள்ள கார்ட்டூன்
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு, இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சோம் 5-ம் இடம் பிடித்து வெளியேறினார். அவரை தொடர்ந்து 4-ம் இடம் பிடித்து ரம்யா பாண்டியனும் வெளியேறினார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட பல பதிவுகளை ஸ்டோரியாக வைத்துள்ளார். குறிப்பாக ரம்யா பாண்டியன், சோம், சாக்லெட் சேர்ந்து இருப்பதுபோல கார்ட்டூன் ஒன்றும் உள்ளது. தவிர, "கடலை தான் போட முடியலை சுண்டலாவது போடு" என்று ரம்யாவிடம் சோம் கூறிய வாசகம் அடங்கிய ஒரு கார்ட்டூனையும் அவர் ஸ்டோரியாக வைத்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்