விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் வாரத்தில் லக்ஸூரி டாஷ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், வெற்றி குறித்து பேசினார்கள். அதில் குறிப்பாக நமீதாவின் கதை அனைவரையும் கலங்க செய்தது. இதனிடையே எதிர்பாராத விதமாக நமீதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார். இதனால் என்ன நடந்தது என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. எனவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
also read : ‘முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்க’.. ஸ்டார்ட் ஆன நாமினேஷன்
இதுவரை போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக, சந்தோசமாக இருப்பதால் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நாமினேஷன் இன்று தொடங்குவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதி ஆகியுள்ளது. இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் வெளியானது. அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வார எவிக்ஷனுக்கு தேர்வான நபர்கள் இசைவாணி, பிரியங்கா, அக்ஷரா, நாடியா, நிரூப், அபினவ், இமான், அபிஷேக் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இசை மற்றும் பாவ்னி ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பாவ்னி இந்த வீட்டில் சிலர் குரூப்பாக இருக்கின்றனர். நாம் அவர்களிடம் சென்று ஏதாவது பேசினால் கூட அதனை தவிர்த்து விட்டு வேறு பேசுவார்கள் கவனித்திருக்கிறேன் என கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஐக்கி எல்லாரும் உன்னை கூப்பிடுகிறார்கள் நீ ஏன் தனியாகவே இருக்கிறாய்? என பாவ்னியிடம் கேட்கிறார்.
also read : கணவரை பிரிந்த நடிகை சமந்தாவுக்கு அட்வைஸ்’ செய்த வனிதா விஜயகுமார்..
#Day8 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/VPOnkJLAOh
— Vijay Television (@vijaytelevision) October 11, 2021
அப்போது அண்ணாச்சி குரூப், அக்ஷரா குரூப்பாக இருக்கட்டும் நான் தான் சென்று பேசுகிறேன் என்கிறார் ஐக்கி. அப்போது குறுக்கிடும் இசை குரூப் இருப்பது இவருக்கும் தெரிந்திருக்கிறது என கூறுகிறார். இதனால் பிக் கடந்த சீசன் போல இந்த சீசனிலும் குரூப்பிசம் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனை பொறுத்தவரை இமான், பிரியங்கா, நிரூப் ஒன்றாகவும், அபிஷேக், வருன், அபினவ் ஆகியோர் ஒன்றாகவும், அக்ஷரா, சின்னப்பொண்ணு மற்றும் மதுமிதா, நாடியா தனியாகவும் இருக்கின்றனர். இதனால் குரூப் பிரச்னை எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5