• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் வீட்டில் முதல் வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அந்த 8 நபர்கள் யார் ?

பிக்பாஸ் வீட்டில் முதல் வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அந்த 8 நபர்கள் யார் ?

பிக்பாஸ்

பிக்பாஸ்

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் வாரத்தில் லக்ஸூரி டாஷ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், வெற்றி குறித்து பேசினார்கள். இதுவரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், மதுமிதா, ஸ்ருதி, பாவ்னி, நமீதா ஆகியோர் தங்களது வாழ்க்கை குறித்து பேசி உள்ளனர். இதனிடையே வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல்ஹாசன் வரும் எபிசோட்கள் ஒளிபரப்பப்படும்.

அதில் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் செயல்களை பற்றி விவாதம் நடக்கும். இதனிடையே கடந்த சனிக்கிழமை எதிர்பாராத விதமாக நமீதா போட்டியில் இருந்து திடீரென்று வெளியேறி உள்ளதாக பிக் பாஸ் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து கமல் ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது ராஜு, சின்னபொண்ணுவின் கதைக்கு டிஸ்லைக் செய்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

also read : ‘முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்க’.. ஸ்டார்ட் ஆன நாமினேஷன்

மேலும் நேற்றைய எபிசோட்டில் கமல், ஒரு போர்டை வைத்து அதில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் லைக் மற்றும் டிஸ்லைக் போடுமாறு கூறினார். இது நேரடியாக அனைவரது முன்னிலையில் நடந்ததால் பிரச்சனைகள் எழ தொடங்கியது. இதில் குறிப்பாக நாடியா, அக்ஷராவிற்கு அதிக டிஸ்லைக் விழுந்தது. இதனால் அக்ஷரா தனிமையில் தனியாக அமர்ந்து இரவில் அழுது கொண்டிருந்தார்.


இந்நிலையில் இன்று காலை வெளியான புதிய ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நாமினேஷன் இன்று தொடங்குவது காட்டப்பட்டிருந்தது. இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்யும்படி ஹவுஸ் மேட்ஸிடம் பிக் பாஸ் கூறுகிறார். அதன்படி ஹவுஸ் மேட்ஸ் நாமின்ட் செய்கின்ற காட்சிகள் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வார எவிக்ஷனுக்கு தேர்வான நபர்கள் இசைவாணி, பிரியங்கா, அக்ஷரா, நாடியா, நிரூப், அபிநய், இமான், அபிஷேக் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதற்கு நாடியா வச்சு செய்ஞ்சுட்டாங்க என்றும் பிரியங்கா, கொளுத்தி போடு என்றும் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நாமினேஷன் குறித்த முழு விவரம் இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: