பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் தான் ஆகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் ஆர்மி பேஜ்களும் உருவாகியுள்ளன. ஆனால் இந்த போட்டியிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து விலகிவிட்டார்.
நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் கமல் வழக்கம் போல் போட்டியாளர்களுடன் உரையாடினார். வீட்டில் இருக்கும் வேலையை பிரித்து செய்ய கிச்சன் டீம் , கிளினிங் டீம், பாத்ரூம் கிளினிங் டீம் என வாரத்தில் முதள் நாளிலேயே போட்டியாளர்கள் பிரித்துக்கொண்டனர். அந்த டீம்களில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் என்று கமல் கேட்க, அனைத்து டீம்களுமே நன்றாக தான் செய்தார்கள் என ஹவுஸ் மேட்ஸ் கூறினர். பின்பு லைக் மற்றும் டிஸ் லைக் கொடுக்கும் விளையாட்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் முடிந்த நிலையில் முதல் வாரம் நாமினேஷன் ப்ராஸஸ் தொடங்கியுள்ளது.
also read : பிக்பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு இது தான் காரணம்..
வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸிடம் ‘இந்த பிக்பாஸ் சீசனின் முதல் நாமினேஷன். இந்த வீட்ல எல்லாருமே நல்லசங்கதானு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்னு பிக்பாஸ் சொல்வதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். பின்பு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று நாமினேஷன் செய்கிறார்கள்.
also read : கண்ல தண்ணி வர அர சிரிச்சேன்.. பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘டாக்டர்’
also read : அய்யய்யோ.. தெரிஞ்சிருச்சா மொமெண்ட்.. பிரியங்காவை கலாய்த்த கமல்ஹாசன்..
இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ‘இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இந்த வார எவிக்ஷன் ப்ராஸஸிற்கு தேர்வான நபர்கள் நாடியா, நிரூப், இமான், இசைவாணி, ப்ரியங்கா, அபிநய், அபிஷேக், அக்ஷாரா என்று பிக்பாஸ் கூறினார். உடனே நாடியா ‘கூப்படவே இல்ல, கூப்புடவே இல்ல சொன்னதுக்கு வச்சி செஞ்சிடங்கன்னு’என்று சிரித்துக்கொண்டே சொல்ல, ஒரு பக்கம் ப்ரியங்கா போடு போடு கொளுத்தி போடு என்று கத்துகிறார். இனிமேல் தான் பிக்பாஸ் வீட்டில் சண்டையே ஆரம்பாக போகிறது என்பதை இந்த ப்ரோமோ காட்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5