விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 5-இல் "யாராலும் மறக்க முடியாத முகங்கள்" என்கிற பட்டியலின் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் ராஜு மற்றும் தாமரையை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் வருண் மற்றும் அக்ஷராவுமே வருவார்கள்.
ஒரு மனுஷனால இவ்ளோ ஜாலியா, ஹேப்பியா, கூலா இருக்க முடியுமா? அதுவும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே? என்று பல பிக் பாஸ் பார்வையாளர்களை வியப்படைய வைத்தது மட்டுமில்லாமல் அவர்களை எல்லாம் தன் ரசிகர்களகவும் மாற்றினார் நம்ம ராஜு பாய்!
மேலும் தாமரை, தன்னை சுற்றி எத்தனை கேமராக்கள் எத்தனை பிரபலங்கள் இருந்தும் கூட ஒரிஜினாலிட்டியை இழக்காமல், ஒட்டுமொத்த எளிய மக்களின் பிரதிபலிப்பாகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவ்விருவர்களுக்கு அடுத்தபடியாக வருண் மற்றும் அக்ஷரா தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஹைலைட் ஆவர்!
"ஒருகாலத்துல எனக்கும் இப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப் இருந்துச்சு!" என்று பலரையும் நினைவில் அசைபோட வைத்த வருண் மற்றும் அக்ஷராவும் "அடச்சே! நமக்கு இப்படி ஒரு ப்ரெண்ட்ஷிப் அமையவில்லையே!" என்கிற பொறாமையையும் கிளப்பி விட்டனர். அந்த அளவிற்கு வருண் மற்றும் அக்ஷராவின் நட்பு பாராட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து ஒன்றாக வெளியேறும் போதும் கூட இவ்விருவர்களும் நண்பர்கள் அல்ல காதலர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் எழவில்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவர்கள் காட்டும் நெருக்கம் "ஒருவேளை இருக்குமோ!?" என்கிற கேள்வியை பலருக்குள்ளும் எழுப்பியது.
ஏனெனில் வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவருமே பெரும்பாலும் ஜோடியாகவே உலா வருகிறார்கள். போதாக்குறைக்கு இவ்விருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் "கமெண்ட்களுக்கு" உள்ளாகிறது. இதனாலேயே இவர்களது ரசிகர்கள் "நட்பு காதலாகி விட்டது" என்று பேச தொடங்கினார்கள். ஆனால் வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவருமே "காதல் கிசுகிசு" குறித்து - இதுவரை - வாய் திறக்காமலேயே தான் இருந்தனர். ஆனால் ஒரு லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றின் வழியாக தங்களது காதலை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர் என்பது போல் தெரிகிறது.
Also Read : இமானின் முன்னாள் மனைவி அந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு செல்கிறாரா?
வருண் மற்றும் அக்ஷராவும் சேர்ந்து ஒரு பிரபல மாத இதழுக்காக திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் ஷேர்களை வாரிக் குவிப்பது மட்டுமில்லாமல் "இதுக்கு மேலே வேற என்னப்பா வேணும்! இவங்க லவ் பண்ணாமலா.. கணவன் மனைவியா போஸ் கொடுப்பாங்க! கன்பார்ம் இது லவ் தான்" என்கிற முடிவுக்கே வந்து விட்டனர். மேலும் சிலர், இது வெறும் ஒரு போட்டோ ஷூட் தான், வருண் மற்றும் அக்ஷராவும் எப்போதும் நல்ல நண்பர்கள் தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.