கமலிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிக் பாஸ் ரியோ!

கமலிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிக் பாஸ் ரியோ!

ரியோ ராஜ்

"காட்டுக்குப் போறோம்.. காட்டுக்குப் போறோம்.. சுத்தி பார்க்க போறோம்.. வண்டியை நிறுத்துங்க..”

 • Share this:
  கமல் ஹாசனிடம் சொன்னதை செய்துக் காட்டியிருக்கிறார் பிக் பாஸ் பிரபலம் ரியோ ராஜ்.

  பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ரியோ, அந்நிகழ்ச்சியில் 3-வது இடம் பிடித்தார். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் என்ன பிளான் எனக் கேட்டார் கமல் ஹாசன்.

  Bigg Boss Rio Raj Forest Trip with his Family 1

  அதற்கு, ’காட்டுக்குப் போகணும் சார்’ என்றார் ரியோ. பின்னர் இறுதிப்போட்டியாளர்களுக்கு பரிசளித்த கமல், ரியோவுக்கு ட்ரெக்கிங் டெண்டை கொடுத்தார். தற்போது கமலிடம் சொன்னதை செய்துக் காட்டியிருக்கிறார் ரியோ.

  Bigg Boss Rio Raj Forest Trip with his Family 1

  To Another World என காரில் காட்டுக்குள் பயணிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள ரியோ ராஜ், எங்கே போகிறார், எந்த இடம் என்பது குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை.

  Bigg Boss Rio Raj Forest Trip with his Family 1

  "காட்டுக்குப் போறோம்.. காட்டுக்குப் போறோம்.. சுத்தி பார்க்க போறோம்.. வண்டியை நிறுத்துங்க.. தேடி பார்ப்போம் அங்க" என சூச்சு சூச்சு டிவி எனும் குழந்தைகளுக்கான யூடியூப் சேனலில் வரும் தமிழ் ரைம்ஸ் பாடலை கேப்ஷனாக போட்டு, ரியோ ராஜ் தற்போது தனது மகள் ரிதியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் படங்கள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: