• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் ஷாக்!

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் ஷாக்!

ரேஷ்மா

ரேஷ்மா

பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி முடிந்த பின்னர், ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம்.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்று விஜய் டிவி-யில் தற்போது இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஆகும். சின்னத்திரை சீரியல்களுக்கென்று ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் டிவி சேனல்கள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்ளும் வகையில் நாள்தோறும் காலை துவங்கி இரவு வரை ஏராளமான சீரியல்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. என்றாலும் அனைவரும் வீட்டில் இருக்கும் இரவு 7 முதல் 10 மணி வரையிலான பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் தான் மக்களை பெரிதும் கவர்கின்றன.

அந்த வகையில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி முடிந்த பின்னர், ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கியலட்சுமியின் கணவர் கோபி கேரக்ட்ரில் நடித்து வருகிறார் சீரியல் நடிகர் சதீஷ்குமார். இந்த தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் மூத்த மகனான செழியன் திருமணம் ஆகி குடும்பத்தினருடன் இருப்பது போலவும், இளைய மகன் எழில் சினிமாத்துறையில் பணிபுரிவது போலவும், இனியா பள்ளி செல்வது போலவும் காட்டப்பட்டு வருகிறது. பெற்றோரின் வறுபுறுத்தலால் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு பாக்கியாவை, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார் கோபி. சரியாக படிக்காத காரணத்தால் எப்போதுமே பாக்கியாவை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார் கோபி. இந்நிலையில் மீண்டும் தான் காதலித்த பெண்ணான ராதிகாவை சந்தித்த கோபி, மீண்டும் அவருடன் நட்பு ரீதியாக பழகி வருகிறார்.

எங்கே குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடுமோ என பயந்து வீட்டிற்கு தெரியாமல் பார்த்து கொள்கிறார். ஆனால் சந்தர்ப்ப சூழலால் ராதிகாவும் - பாக்கியாவும் நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். ஆனால் தற்போது வரை ராதிகாவிற்கு, கோபி பாக்கியாவின் கணவர் என்பது தெரியாமலும், பாக்கியா மற்றும் குடும்பத்தினருக்கு ராதிகா கோபியின் தோழி மற்றும் முன்னாள் காதலி என்பது தெரியாமலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டு வருகிறது. கோபியின் தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியில் சாந்தமான நடிப்பால் ராதிகா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகையும் மற்றும் டான்ஸரான நந்திதா ஜெனிஃபர். இந்நிலையில் ராதிகா கேரக்டரில் இனி நந்திதா ஜெனிஃபருக்கு பதிலாக பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா நடிக்க உள்ளார். விஜய் டிவி இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Vijay Television (@vijaytelevision)






ராதிகா கேரக்டரில் அமைதி மற்றும் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நந்திதா ஜெனிஃபர் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது பாக்கியலட்சுமி சீரியலை தவறாமல் பார்த்து வரும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நந்திதா ஜெனிஃபர். வெள்ளித்திரையில் குரூப் டான்ஸராக அறிமுகமான நந்திதா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைபடத்தில் இடம்பெற்றுள்ள யாமினி பாடலில் தோன்றி இருப்பார். இந்நிலையில் சீரியல்களில் நடித்து வந்த இவர், ராதிகா கேரக்டர் மூலம் அதிக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: