ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ராஜூ அம்மாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! காரணம் பிரியங்காவா?

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ராஜூ அம்மாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! காரணம் பிரியங்காவா?

அக்‌ஷராவின் அண்ணாவும் சரி, ராஜூவின் அம்மாவும் சரி முகத்தில் அடிப்பது போல் அவரை பேசியது பிரியங்காவிம்ன் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

அக்‌ஷராவின் அண்ணாவும் சரி, ராஜூவின் அம்மாவும் சரி முகத்தில் அடிப்பது போல் அவரை பேசியது பிரியங்காவிம்ன் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

அக்‌ஷராவின் அண்ணாவும் சரி, ராஜூவின் அம்மாவும் சரி முகத்தில் அடிப்பது போல் அவரை பேசியது பிரியங்காவிம்ன் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

 • 3 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ராஜூ மோகன் அம்மா மற்றும் மனைவி தாரிகாவை நெட்டிசன்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

  பிக் பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் இந்த டாஸ்கை ரசிகர்களும் சரி, போட்டியாளர்களும் சரி ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருவது தான் இந்த ஃபிரீஸ் டாஸ்கில் பலராலும் ரசிக்கப்படும் ஒன்று. கிட்டத்தட்ட 80 நாட்களாக தங்களது குடும்பத்தை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்கள் அவர்களின் அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என உறவுகளை பார்த்து பாசத்தில் அழுது தீர்ப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் அழுவதை பார்த்து ரசிகர்கள் கண்ணிலும் கண்ணீரை பார்க்கலாம்.

  முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் அக்‌ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வந்தார்கள். அவர்களை பார்த்து அக்‌ஷரா பாச உணர்வில் அழுதது, மடியில் தவழ்ந்தது எல்லாமே எமோஷ்னல் என்றாலும் ஓவர் ஃபேமலி டிராமா என்ற ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்ஸ்களை பறக்க விட்டனர். அதே போல் ஒரு நிலை தான் தற்போது ராஜூவுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜூவை கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம் தான் அவரின் அம்மா மற்றும் மனைவி தாரிகா நடந்து கொண்டதை பற்றி விமர்சித்து வருகின்றனர்.

  நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டுக்குள் ராஜூவின் மனைவி தாரிகா வந்தார். அவரை பார்த்ததும் ராஜூ ஓடிச்சென்று காதல் முத்தங்களை வழங்கினார். உடனே பிரியங்காவும் ஓடிச் சென்று கட்டியணைத்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் தாரிகாவை உபசரித்தனர். ஆனால் தாரிகா எந்த ஹவுஸ்மேட்ஸிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. ராஜூவுக்கு மனைவியாக சில அட்வைஸ்களை வழங்கினார். அதில் “ அண்ணன் - தங்கை பாச போராட்டம் எல்லாம் இங்கு வேண்டாம். நீ கேம்மை விளையாடு போதும்” என்றார். அதே போல்” அண்ணாச்சி போன பிறகு டவுன் ஆகிவிட்டாய், அது பார்ப்பதற்கு நல்லா இல்லை. நீ எப்போதும் போல இரு” என்றார்.

  read more.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ்.. காரணமான அக்கா சிந்து இவர் தான்!

  தாரிகாவிடம் பிரியங்கா, நிரூப், தாமரை ஆகியோர் நிறைய பேச முயற்சி செய்தனர். ஆனால் அவர் அதற்கு  இடம் கொடுக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ராஜூவின் அம்மா, சந்திரிக்கா உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் ராஜூ கட்டிப்பிடித்து அழுதார். ராஜூவுக்கு அப்படியே அவரின் அம்மா கண்ணு. தனது மகன் இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து இருப்பதை பார்த்து தாயாக அவர் பெருமைப்பட்டார். எல்லா தாய்க்கும் இருக்கும் அதே குணம், தனது மகன் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது அது இயல்பானது. ஆனாலும் கூட சக ஹவுஸ்மேட்ஸை அவர் டார்கெட் செய்யும் விதத்தில் பேசியது சில நெகடிவ் கமெண்டுகளை வாங்கி தந்ததுள்ளது.

  சஞ்சீவ் தொடை நடுங்கி என ராஜூவை சொன்னது, பிரியங்கா காபி கப்பை கழுவ சொன்னது என எல்லாவற்றையும் மூஞ்சிக்கு நேராக கேட்டு சங்கடமான சூழ்நிலையை ஏர்படுத்தினார். இதை ராஜூவும் விரும்பவில்லை என்பது அவர் கொடுத்த ரியாக்‌ஷன் மூலம் தெரிந்தது. இதுபுறம் இருக்க, அக்‌ஷராவிடம் ராஜுவின் அம்மாவும் சரி மனைவியும் சரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாவனியிடம் ராஜூ அம்மா சற்று ஸ்பெஷலாகவே நடந்து கொண்டார். இந்த நேரத்தில் பிரியங்கா எமோஷனில் கிச்சனுக்கு சென்று அழவும் தொடங்கினார்.

  ' isDesktop="true" id="647085" youtubeid="qRUPd7inZF8" category="entertainment">

  இந்த வீட்டில் ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் வரும் போது அவர்களை ஓடிச் சென்று முதலில் வரவேற்பது பிரியங்கா தான். ஆனால் அக்‌ஷராவின் அண்ணாவும் சரி, ராஜூவின் அம்மாவும் சரி முகத்தில் அடிப்பது போல் அவரை பேசியது பிரியங்காவின் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்த விவாதமே இணையத்தில் அரங்கேறி வருகிறது. ராஜூவின் அம்மா திருநெல்வேலியை சேர்ந்தவர், அவரின் பேச்சு, பழக்கம் எல்லாம் அப்படிதான் இருக்கும் என்றும் ஒருசிலர் ராஜூ குடும்பத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

  read more.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? எவிக்‌ஷன் அப்டேட்!

  ராஜூ அம்மா, மனைவி வீட்டை விட்டு சென்ற உடன்,  அக்‌ஷரா மற்றும் தாமரை ஆகியோர் தனியாக இதை பற்றி பேசினர். அப்போது அக்‌ஷரா, “என்னிடம் ராஜூ அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்றார். அதற்கு தாமரை ‘ராஜூ அம்மாவுக்கு பிரியங்காவை பிடிக்கவில்லை “ என்றார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: