• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Promo : மீண்டும் வாக்குவாதம்.. கமலுக்கே டஃப் கொடுக்கும் பாவனி vs தாமரை!

Bigg Boss Promo : மீண்டும் வாக்குவாதம்.. கமலுக்கே டஃப் கொடுக்கும் பாவனி vs தாமரை!

பிக் பாஸ் புரமோ

பிக் பாஸ் புரமோ

இந்த சண்டை குறித்து கமல் இன்று பேசுவது தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு வாரங்களை கடந்து கோலகமாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டார். பின்னர் அபிஷேக், சின்ன பொண்ணு அடுத்ததடுத்து வெளியேறினர். தற்போது 14 பேர் போட்டியில் உள்ளனர்.

    இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என நெட்டிசன்கள் சிலர் தகவல் பரப்பி வரும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறது இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் உறுதி செய்துள்ளார். எனவே யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று அடுத்த வார தலைவர் டாஸ்குக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. ‘செண்பகமே செண்பகமே’ என்று பெயரிட்ட அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ப்ளூ மற்றும் ஆரஞ்சு உடை அணிந்து இரு அணிகளாக பிரிந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு காலி  பாட்டில்கள் கொடுக்கப்பட்டது. ஹவுஸ்மேட்ஸ் அடித்து புடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் பால் கறக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு அணியினரும் சண்டை போட்டு இந்த டாஸ்கில் ஈடுபட்டனர்.

    ஆரஞ்சு அணியில் தாமரை, அண்ணாச்சி, சிபி, ராஜு, சுருதி, ஐக்கி, இசை ஆகியோரும், ப்ளூ அணியில் பிரியங்கா, பாவ்னி, நிரூப், அபினய், அக்ஷ்ரா, வருண், மது ஆகியோரும் இருந்தனர். இந்த இரண்டு அணியில் எந்த அணியினர் அதிகமாக பால் சேகரிக்கின்றனரோ அந்த அணியினர் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கூறப்பட்டிருந்தால் போட்டி சற்று கடுமையாகவே இருந்தது. இந்த டாஸ்கின் போது ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டனர். அதில் சிபி மற்றும் அக்ஷ்ரா இடையே பிரச்னை ஏற்பட்டது.

    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போவது யார்? வெளியான தகவல்!

    மேலும் ஆரஞ்சு அணியை சேர்ந்த ஐக்கி மற்றும் இசை பாத்ரூமிற்கு சென்று பாலில் தண்ணீர் கலந்தனர். இதனை தாமரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாவ்னி, தாமரை பாலில் தாமரை கலந்ததாக கூறிவிடுகிறார். இதனால் கடுப்பான தாமரை, பொய் பேசாதே, எனக்கு பிடிக்காது, மூஞ்சிய பாரு என திட்ட ஆரம்பித்து விட்டார். அதற்கு பாவ்னியும் வாக்குவாதம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் தாமரை, பாவ்னியை அடிக்க கை ஓங்கிவிட்டார். இதனை பார்த்த வருண், அக்ஷ்ரா ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தினர்.



    இந்த சண்டை குறித்து கமல் இன்று பேசுவது தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில் இந்த சண்டை குறித்து கமல் கேள்வி எழுப்புகிறார். அப்போது தாமரை, எப்போதும் மனது நோகும்படி பாவ்னி பேசுவதால் எனக்கு கோபம் வருகிறது சார் என கூறுகிறார். அதற்கு பாவ்னி, தாமரை மனதிற்குள் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு தான் எப்போதும் பேசுகிறார். பட்டுபட்டென பேசுகிறார் என்றும் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் தாமரை நான் எப்போது அப்படி பேசினேன் என்கிறார். இதற்கிடையே கமல் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார், ஆனால் இருவரும் கமல் முன் நின்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: