Home /News /entertainment /

அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

அமீர், பாவ்னி இருவரிடமும் பிரியங்கா நட்பாக பழகும் நிலையில் அவரே இப்படி கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமீர், பாவ்னி இருவரிடமும் பிரியங்கா நட்பாக பழகும் நிலையில் அவரே இப்படி கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமீர், பாவ்னி இருவரிடமும் பிரியங்கா நட்பாக பழகும் நிலையில் அவரே இப்படி கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • 2 minute read
  • Last Updated :
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனால் 8 பேருமே நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் டாஸ்கில், யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. இதில் நிரூபை அனைவரும் தேர்ந்தெடுத்து வெளியேற்றினர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கூடையில் 10 முட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை சக போட்டியாளர்கள் உடைக்க வேண்டும் அல்லது அதனை எடுத்து தங்கள் கூட்டில் வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக யார் இருவரின் கூடையில் குறைவான முட்டைகள் இருக்கிறதோ அவர்கள் இருவரும் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.

இதையும் ப்டிங்க... நிஜ சம்பவங்களை கையில் எடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்! எதிர்ப்பும்.. ஆதரவும்

அதன்படி டாஸ்க் தொடங்கப்பட்ட நிலையில் பாவ்னியின் முட்டையை ராஜு உடைத்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அமீர், தாமரையின் முட்டைகளை உடைத்தார் . அப்போது பிரியங்கா, அமீர் முட்டைகளை பாதுகாத்ததால் தாமரை கடுப்பானார். இதனை தொடர்ந்து பிரியங்காவின் முட்டைகளை தாமரை உடைக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைச்சவர்கள் இல்லை என்பது போல சண்டை போட்டுக்கொண்டனர். இறுதியாக தாமரை, பாவ்னியின் கூடுகளில் குறைவான முட்டைகள் இருந்ததால் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

இதனால் இன்றைய டாஸ்கில் ராஜு, பிரியங்கா, அமீர், சஞ்சீவ் மற்றும் சிபி ஆகியோர் போட்டியிடுவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் போட்டியாளர்களின் உருவம் இருக்கும் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது கலர் தண்ணீர் நிறைந்த பலூன்கள் கொடுப்பட்டு அறிவிக்கும் வாசகம் யாருக்கும் பொருந்துமோ அவர்களது போர்டு மீது அதனை உடைக்குமாறு கூறப்படுகிறது. அப்போது "ஒன்னும் இல்லாத விஷயத்தை கூட ஊதி பலூன் போல பெரிதாகும் நபர்" என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதற்கு ராஜு பிரியங்கா மீதும், பிரியங்கா ராஜு மீதும் எறிந்து கொள்ளும் காட்சிகள் இருந்தது.



இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தான் வெற்றி பெறுவதற்காக பாவ்னி மீது இருக்கும் அன்பை அமீர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதாக கூறி பிரியங்கா, அமீர் மீது பலூனை எறிகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமீர், பாவ்னி மீது இருக்கும் அன்பு வேறு, நான் விளையாட வந்திருப்பது வேறு என கூறி, நீ என்மீது வைத்திருக்கும் அன்பு தற்போது எனக்கு பொய்யாக தெரிகிறது என கூறி பிரியங்கா மீது எறிகிறார்.

இதனை கேட்டு, நீ கடைசி வரியை கூறாமல் இருந்திருக்கலாம், தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம் என பிரியங்கா கூறும் காட்சிகள் உள்ளது. அமீர், பாவ்னி இருவரிடமும் பிரியங்கா நட்பாக பழகும் நிலையில் அவரே இப்படி கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றும் மோதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published:

அடுத்த செய்தி