• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • BIG BOSS: பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது யார்?

BIG BOSS: பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது யார்?

பிக் பாஸ் பாவனி ரெட்டி

பிக் பாஸ் பாவனி ரெட்டி

பெரிய வாய்ப்பை பெற்றிருக்கும் பாவனி ரெட்டியும், பிக்பாஸ் வீட்டில் சூப்பராக கேம் விளையாடி வருகிறார்

  • Share this:
    பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பாவனி ரெட்டிக்கு, இந்த வாய்ப்பு வெள்ளித்திரை பிரபலம் ஒருவரின் தலையீட்டால் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கு முன்பே, இந்த சீசன் குறித்தான யூகங்கள் இணையங்களில் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு விஜய் டிவியும் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என யூகியுங்கள் என்று கொளுத்திப்போட்டது. டிவியில் தங்களுக்கென சோர்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரளவு, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் நபர்களின் பெயர்களை கணித்திருந்தார்கள். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா, யூ டியூப்பில் சினிமா விமர்சனம் செய்து பிரபலமான அபிஷேக் ஆகியோரின் பெயர்கள் முன்பே அரசல் புரசலாக தெரிந்துவிட்டது.

    மற்ற போட்டியாளர்களின் பெயர்கள் மக்களுக்கு சர்பிரைஸாக இருந்தது. ஒருவழியாக பிக்பாஸ் தொடங்கி ஏறக்குறைய 4 -வது வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போட்டியின் தொடக்கத்தில் 18 பேர் இருந்த நிலையில் தற்போது வரை 3 பேர் வெளியேறி 15 பேர் மட்டுமே வீட்டிற்குள் இருக்கின்றனர். நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து ஏன் விலகினார் என்ற தகவல் இதுவரை முழுமையாக தெரியவில்லை. நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று எலிமினேட்டாகினர்.

    இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆகப்போகிறார்கள்? என்பது சஸ்பென்ஸாக உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பாவனி ரெட்டி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி ஆகிய தொடர்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்பு வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் தலையீட்டால் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    கடத்தல் வழக்கு... ஃபேஸ் சர்ஜரி! பிக் பாஸ் அக்‌ஷராவை சுற்றும் சர்ச்சைகளுக்கு என்ன காரணம்?

    பாவனி ரெட்டி, பிரதீப் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக லிவ்விங் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். பின்னர், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர். ஆனால், பிரதீப் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பாவனி ரெட்டி, ஆனந்த் ராய் என்பவருடன் பின்னர் நெருங்கிப் பழகினார். அவர் நடிகர் சிம்புவுக்கு நெருக்கம் எனக் கூறப்படுகிறது. பாவனியும், ஆனந்த் ராயும் லிவ்விங் டுகெதரில் இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், சிம்பு தனக்கு இருக்கும் பழக்கத்தைப் பயன்படுத்தி பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.



    பெரிய வாய்ப்பை பெற்றிருக்கும் பாவனி ரெட்டியும், பிக்பாஸ் வீட்டில் சூப்பராக கேம் விளையாடி வருகிறார். கடந்த வாரம் வரை பெரியளவில் அவர் மீது குறைகள் ஏதும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தாமரையின் காயினை திருடியதில் கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொண்டனர். கேமின் ஒரு பகுதியாக தாமரையின் காயினை திருடியிருந்தாலும், பாவனி கையில் எடுத்த டிரிக்ஸ் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: