Home /News /entertainment /

‘கவலையை தூக்கி கடலில் வீசுங்க”... நீச்சல் உடையில் பீச்சில் ஆட்டம் போட்ட ஓவியா! 

‘கவலையை தூக்கி கடலில் வீசுங்க”... நீச்சல் உடையில் பீச்சில் ஆட்டம் போட்ட ஓவியா! 

Oviya

Oviya

Bigg Boss Oviya Photos | ஓவியா எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம பிசியாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் அடிக்கடி Q and A, செஷன் நடத்தி சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஓவியா 2007-ம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே, கலகலப்பு, மதயானைக்கூட்டம், புலிவால், சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் சில மட்டுமே ஓவியாவிற்கு பெயரும், புகழும் பெற்று தரும் வகையில் அமைந்தது.

சில காலம் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த ஓவியாவிற்கு 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. காலையில் எழுந்ததும் செம்ம எனர்ஜியுடன் டான்ஸ் ஆடுவது, எப்போதும் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் க்யூட் ஸ்மைல், எதிரிகளை ஸ்மார்ட் ஆக நோஸ் கட் செய்வது என ஓவியாவின் ஒவ்வொரு விஷயத்தையும் பிக்பாஸ் ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவருக்கு முதன் முறையாக சோசியல் மீடியாவில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் அது ஓவியாவிற்காக தான். அப்போது ஓவியாவுடன் பிக்பாஸ் ஹவுஸ்மெட்டாக இருந்த ஜூலி, காயத்ரி ரகுராம் என யார் வம்பு செய்தாலும், ஈவு இரக்கம் இல்லாமல் பங்கமாய் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் ஓவியாவிற்கு இருந்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரவ்வை துரத்தி, துரத்தி காதலித்த ஓவியா ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனது காதலை ஒப்புக்கொள்ளாததால் அங்கிருந்து வெளியேறினார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவிற்கு யாருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இல்லை. திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர், சினிமாவில் கலக்குவார் என பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

Also Read : கடற்கரையில் ஜாலியாக ஆட்டம் போடும் அமலா பால்

இருப்பினும் ஓவியா எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம பிசியாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் அடிக்கடி Q and A, செஷன் நடத்தி சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுப்பது, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை களமிறக்குவது என ஓவியா ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அவ்வப்போது ஓவியா ட்விட்டரில் பதிவிடும் கருத்துக்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாவதும் உண்டு. 
View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)


இந்த முறை கருத்துடன் கவர்ச்சி புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை நிலைகுலைய வைத்திருக்கிறார். ஓவியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கடல் அலையுடன் துள்ளி விளையாடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அத்துடன் “கவலைகளை தூக்கி கடலில் போடுங்கள்” என்ற டேக் லைனையும் பதிவிட்டு அசத்தியுள்ளார். ஓவராக இளைத்து ஒல்லி பெல்லி லுக்கிற்கு மாறிய ஓவியா, கடல் அலையுடன் பிகினியில் குதூகலமாக ஆட்டம் போடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

Also Read : புடவையில் ரசிக்க வைக்கும் நடிகை ஷிவானி நாராயணன்..

ஓவியாவின் கைவசம் தற்போது “ஸ்கேம்“ எனும் தெலுங்கு படமும், “Daandiga“ எனும் கன்னடத் திரைப்படமும் உள்ளது. தமிழைப் பொறுத்தவரை “ராஜ பீமா”, “கான்ட்ராக்டர் நேசமணி“ போன்ற ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Bigg Boss Tamil, Entertainment, Oviya

அடுத்த செய்தி