இவர் மிஸ் இந்தியா எர்த் 2002 பிராச்சி மிஸ்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் மஹத்.
மஹத் - பிராச்சி மிஸ்ரா ஜோடியின் நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
சிம்புவுடன் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் நடித்த மஹத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இவர் மிஸ் இந்தியா எர்த் 2002 பிராச்சி மிஸ்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் மஹத்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மஹத்தை தான் காதலிப்பதாக நடிகை யாஷிகா தெரிவித்தார். அப்போது யாஷிகாவைத் தானும் காதலிப்பதாக மஹத் கூறினார். இதையடுத்து மஹத்தைத் தான் பிரிந்துவிட்டதாக பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பின்னர் அந்தப் பதிவை நீக்கி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு இருவருடைய மனக்கசப்பும் நீங்கி மீண்டும் காதலர்கள் ஆனார்கள். தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தை வீடியோவை இருவரும் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த பதிவில், “என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று, என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த நாள் ” என்று கூறியுள்ளார் மஹத்.
வீடியோ பார்க்க: தளபதி 28 - விஜய்க்கு ஹிட் கொடுத்த 28 இயக்குநர்கள்!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.