’அப்பாவாக போகிறேன்...’ திருமணநாளில் பிரபல நடிகர் சொன்ன குட் நியூஸ்!

’அப்பாவாக போகிறேன்...’ திருமணநாளில் பிரபல நடிகர் சொன்ன குட் நியூஸ்!

மஹத்-பிராச்சி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

 • Share this:
  தான் விரைவில் அப்பாவாக போவதாக பிரபல நடிகர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

  'மங்காத்தா’, ’ஜில்லா’, ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மகத். சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

  மகத்தும் பிரபல மாடல் ஆழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இதில் மகத்தின் நண்பர் சிம்பு, கலந்துக் கொண்டார்.
  இன்று திருமண நாள் கொண்டாடும் இவர்கள், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். பிராச்சியின் வயிற்றை முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகத், "நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை பிராச்சியும் ரீபோஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து இந்த அழகிய தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: