ஸ்டார் விஜய் டிவி-யின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தான் தற்போது வரை தமிழ் சின்னத்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த மெகாஹிட் ஷோவாக இருந்து கொண்டிருக்கிறது.
2017- துவங்கிய இந்த ஷோ 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து உள்ளது. தவிர இதன் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட்டும் சீசன் 1-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது. ரசிகர்களை வெகுவாக மகிழ்விக்கும் பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம்.கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸின் 3-வது சீசன் ஒளிபரப்பானது.
இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா மரியனேசன் கடந்த 1996-ல் மார்ச் 23-ம் தேதி பிறந்தார். இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்த இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் மூலம் இலங்கையிலும், தமிழகத்திலும் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 3-ன் முடிவில் முகேன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்த சீசனின் போது கவின் - லாஸ்லியா இடையே காணப்பட்ட நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. கவின் - சாக்ஷி இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தெரிந்தும் கவினுடன் நெருக்கமாக பழகுவதிலேயே லாஸ்லியா ஆர்வம் காட்டியதும், அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் நடந்த பல களேபரங்களும், செட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை தன் மகளை வார்த்தைகளால் வெளுத்து வாங்கியதும் நினவிருக்கலாம்.
பிக்பாஸில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவிற்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. எனினும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்று கொள்ளாமல், ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர்கள் சதீஷ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான "பிரண்ட்ஷிப்" திரைப்படம் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.
Also Read : உயிரைப் பறித்த பிளாஸ்டிக் சர்ஜரி... சீரியல் நடிகை பரிதாப மரணம்
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக காணப்படும் லாஸ்லியா, அவ்வப்போது வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்விப்பார். இன்ஸ்டாவில் இவரை சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் "உங்கள் கடினமான நாட்களில் உங்களை இன்னும் கொஞ்சம் பாராட்டி கொள்ளுங்கள்" என்ற கேப்ஷனில் இவர் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மஞ்சள் கலர் மாடர்ன் உடையில் லாஸ்லியா கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களை சொக்க வைப்பதாக உள்ளன. இந்த மாடர்ன் காஸ்ட்யூமில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லாஸ்லியா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Losliya, Photos