ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் ஜூலிக்கு கிடைத்த கவுரவம்... செவிலியர் தினத்தில் வெளியிட்ட சிறப்பு போட்டோஸ்!

பிக்பாஸ் ஜூலிக்கு கிடைத்த கவுரவம்... செவிலியர் தினத்தில் வெளியிட்ட சிறப்பு போட்டோஸ்!

Julie

Julie

Bigg Boss Julie | பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜூலி செவிலியராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. எனவே உலக செவிலியர் தினமான நேற்று ஜூலி தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நடிகர்கள் ஸ்ரீ, வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு, ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், சக்தி, சினேகன், மற்றும் நடிகைகள் நமீதா, ரைசா வில்சன், ஓவியா, காயத்ரி ரகுராம், அனுயா, ஓவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற ஜூலியும் பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷங்களை எழுப்பி வீரத்தமிழ்ச்சி என புகழப்பட்ட ஜூலிக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. எனவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து வரவேற்றனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே ஜூலியின் உண்மை முகத்தை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். போதாக்குறைக்கு காய்த்ரி ரகுராம், சக்தி ஆகியோருடன் சேர்ந்து ஜூலி போட்ட ஆட்டம், ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதனால் சோசியல் மீடியாவில் ஆஹா... ஓஹோவென புகழ்ந்த ரசிகர்களே அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இதனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் ட்ரோல் மற்றும் மீம்ஸ் கன்டென்ட்டாக மாறினார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக ஜூலி அறிவித்ததை கூட நெட்டிசன்கள் கிண்டல் செய்யவே செய்தனர். சோசியல் மீடியாவில் போட்டோ ஷூட் என்ற பெயரில் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலிக்கு பெரிதாக ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை, என்றாலும் சோசியல் மீடியாவில் புகழ் வெளிச்சத்திற்காக ஏதாவது ஒன்றை செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜூலி செவிலியராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. எனவே உலக செவிலியர் தினமான நேற்று ஜூலி தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

Also Read : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக் பாஸ் ஜூலி... என்ன காரணம்?

செவிலியர்கள் தினம் அப்போலோ மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜுலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)அத்துடன் “தேவைப்படுபவர்களிடம் தொடர்ந்து இரக்கத்தையும் அக்கறையையும் காட்டுவதற்கு நன்றி. நீங்கள் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் உங்கள் இருப்பு பலரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள். உங்களில் ஒருவராக இருப்பதில் பெருமை!” என பதிவிட்டுள்ளார். அதற்கு ஆதரவாகவும், நெகட்டிவாகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Published by:Selvi M
First published:

Tags: Bigg boss Julie, Nurses day