HOME»NEWS»ENTERTAINMENT»bigg boss fame som shekar welcome video msb

மெர்சலாக வந்திறங்கிய பிக்பாஸ் சோமுக்கு உற்சாக வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சோம் சேகருக்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

மெர்சலாக வந்திறங்கிய பிக்பாஸ் சோமுக்கு உற்சாக வரவேற்பு
சோம் சேகர்
  • Share this:

பிக்பாஸ் தமிழ் -4 வது சீசனில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இவர் துணை நடிகராக நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வெளியானதால் ரசிகர்களின் கவனம் பெற்றார். இந்த சீசனில் சோம் சேகர் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என பார்வையாளர்கள் யூகித்திருந்த நிலையில் அதை பொய்யாக்கி இறுதி வரை சென்றார்.

அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இருந்த சோம் சேகர் கடைசி சில வாரங்களில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இந்த சீசனில் முதலாவது நபராக இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நிகழ்ச்சியின் இறுதி வரை எந்த ஒரு போட்டியாளருடனும் பகையை சம்பாதிக்காமல் அனைவருடனும் நட்பு பாராட்டி வந்த சோம் சேகர் ஃபைனலில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இசைக்கருவி ஒன்றை பரிசளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பியிருக்கும் போட்டியாளர்களுக்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். நடிகை ரம்யா பாண்டியனுக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், சோம் சேகருக்கு ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.





வீட்டிலிருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து சோம் சேகரை வரவேற்க பின்னணியில் மெர்சல் பட பாடல் ஒலிக்கிறது.
Published by:Sheik Hanifah
First published: