சிவகார்த்திகேயனின் ‘டான்’படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

டான் பட பூஜை

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக்கும் இணைந்துள்ளார்.

  • Share this:
சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மார்ச் மாதம் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்கிறது.

மேலும் ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார். அதேபோல் சூரி - சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். முதல்முறையாக இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, ஆர் ஜே விஜய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஷாரிக்கும் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஷாரிக்கின் தாயார் உமாரியாஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். குக்வித் கோமாளி புகழ் ஷிவாங்கி மற்றும் ஷாரிக் டான் திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக விமானத்தில் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் உமா ரியாஸ் கான்.



 




View this post on Instagram





 

A post shared by @umariyazkhan






டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 11-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: