Home /News /entertainment /

சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்

சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

சூர்யா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாண்டியன், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பாரத்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனது மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதையில் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)






கடந்த ஆண்டு 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. மேலும் ஆஸ்கர் விருது போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Suriya, Actress Ramya Pandiyan, Kollywood

அடுத்த செய்தி