சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிம்பு

சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் டேனியல் இணைந்துள்ளார்.

  • Share this:
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 9-ம் தேதியிலிருந்து மீண்டும் பாண்டிச்சேரியில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது மாநாடு படக்குழு. அதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியல் இணைந்துள்ளார். சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் படிக்க: விஜய், சூர்யா ரசிகர்கள் திடீர் மோதல் - ட்ரெண்ட் மாறியதா?

‘மாநாடு’ படப்பிடிப்புக்கு இடையே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘ஈஸ்வரன்’ திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:

சிறந்த கதைகள்