• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அவார்டை ரிட்டர்ன் செய்த 'பிக்பாஸ்' பாலாஜி முருகதாஸ் - என்ன பிரச்சனை?

அவார்டை ரிட்டர்ன் செய்த 'பிக்பாஸ்' பாலாஜி முருகதாஸ் - என்ன பிரச்சனை?

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது மற்றும் அவர் மேடையில் 2 நிமிடங்கள் பேசியது என எதுவுமே ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

 • Share this:
  பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் பிரபல தனியார் யூடியூப் சேனல் மீது தனக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அதோடு நில்லாமல் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் டிவி & டிஜிட்டல் அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சியில் அந்த சேனல் தனக்கு அளித்த "Biggest sensation on reality Television award" என்ற விருதை திருப்பி தருவதாகவும் அறிவித்துள்ளார். அவரது இந்த ட்விட் பிக்பாஸ் மற்றும் பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  சர்வதேச மாடலிங் நிகழ்சிகள் மற்றும் அழகு போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாடலான பாலாஜி முருகதாஸ் ஃபேஷன் உலகில் தடம் பதித்து புகழ் பெற்றிருப்பினும் , பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவர் வெளிப்படுத்திய ஸ்டைல் மற்றும் அழகு, வெளிப்படையான அணுகுமுறை தமிழக தொலைக்காட்சி குறிப்பாக பெண் ரசிகர்களை பாலாஜி முருகதாஸ் பெரிதும் ஈர்க்க காரணமானது. ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 4, கடந்த அக்டோபரில் துவங்கி, ஜனவரி 17 அன்று முடிந்தது. இந்த 4-வது சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, சோம் சேகர் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

  Also Read :  விஜய் மகனுடன் ஜோடியாக நடிக்க ஆசை! நடிகையின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  இதில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். அந்த சீசன் முழுவதும் அவருடன் மல்லுக்கட்டிய பாலாஜி முருகதாஸ் இரண்டாமிடம் பெற்றார். பிக் பாஸ் சீசன் 4-ல் சண்டைகள், சர்ச்சைகள் மற்றும் ரொமேன்ஸ் என கலந்து கட்டி கொண்டு சென்றதற்கு முக்கிய காரணமும் பாலாஜி முருகதாஸ் தான். ஆரியுடன் இவர் தொடர்ந்து ஆவேசமாக சண்டையிட்டது, மற்றொரு போட்டியாளரான சனம் ஷெட்டி அழகி பட்டம் வென்றது குறித்து சர்ச்சையாக பேசியது,

  கேப் கிடைக்கும் போதெல்லாம் ஷிவானி நாராயணனுடன் இவர் செய்த ரொமேன்ஸ் என படு அலப்பறையாக சீசன் 4 அமைய காரணம் பாலாஜி தான். ரெட் கார்டு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி ரசிகர்களின் பேராதரவுடன் கடைசியாக இரண்டாமிடம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

  Also Read :  'எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன்’ ட்ரோல்களுக்கு ரைசா பதிலடி!

  இதனிடையே சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது மற்றும் அவர் மேடையில் 2 நிமிடங்கள் பேசியது என எதுவுமே ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதுவே பாலாஜி முருகதாஸ் ஏமாற்றமடைய காரணமாக அமைந்துள்ளது. பாலாஜி முருகதாஸ் தொடரான காட்சிகள் ஒளிபரப்பபடாததற்கு விருது நிகழ்ச்சியின் போது, மேடையில் இருந்த பிஹைண்ட்வுட்ஸ் ரிவியூவரை (பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்) அவர் விமர்சித்து பேசியதே காரணம் என கூறப்படுகிறது.  நான் விருது வாங்கியதையோ அல்லது நான் பேசியதையோ ஒளிபரப்பாத உங்களின் விருது எனக்கு எதற்கு என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ள பாலாஜி முருகதாஸ் பிஹைண்ட்வுட்ஸின் "Biggest sensation on reality Television award"-ஐ திருப்பி தருவதாக பதிலடி கொடுத்துள்ளார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: