தொடரும் பிக்பாஸ் சர்ச்சை... அனிதா சம்பத் - பிரபல தயாரிப்பாளர் இடையே முற்றும் மோதல்!

பிக்பாஸ் - அனிதா சம்பத்

பிக்பாஸ் வீட்டில் போட்டு கொண்ட சண்டையை விட சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது அதிகம் சண்டையிட்டு கொள்கின்றனர் பிரபலங்கள்.

  • Share this:
    தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5-வது சீசனை எதிர் நோக்கியுள்ளது. சில மாதங்களில் அடுத்த சீசனே துவங்க உள்ள நிலையில், 4-வது சீசனில் ஏற்பட்ட சர்ச்சைகளும், சண்டைகளும் இன்று வரை சோஷியல் மீடியாக்கள் மூலம் வார்த்தை போராக ஓயாமல் வெடித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டு கொண்ட சண்டையை விட சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது அதிகம் சண்டையிட்டு கொள்கின்றனர் பிரபலங்கள். சமீபத்திய பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள சச்சரவுகளுக்கு பிஹைண்ட்வுட்ஸ் அவார்ட் நிகழ்வு துவக்க புள்ளியாக மாறியது.

    இந்த அவார்ட் நிகழ்வில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸுக்கு "Biggest sensation on reality Television award" என்ற அவார்ட் வழங்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது பாலாஜி விருது வாங்கியதோ அவர் மேடையில் பேசியதோ ஒளிபரப்பாகவில்லை. இதற்கு காரணம் மேடையில் இருந்த ரிவியூவரை (லிப்ரா புரொடக்ஷன்ஸை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர்) அவர் விமர்சித்து பேசியதே காரணம் என கூறப்பட்டது.

    இதனால் பாலாஜி பிஹைண்ட்வுட்ஸ் தனக்கு அளித்த விருதை ரிட்டர்ன் செய்வதாக அறிவித்தார். பாலாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த அனிதா சம்பத், சீக்கிரம் இவர்களின் முகமூடி அவிழும். பணம் கொடுத்து பேட்டி எடுத்த விவகாரமும் விரைவில் வெளிய வரும். பெருமையாக இருக்கிறது பாலா என்று பதிவிட்டு இருந்தார்.

    Also Read : சன் டிவி-யில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம் - எந்த சீரியல் தெரியுமா?

    இதனால் கோபமடைந்த ரவீந்தர் மற்றும் அனிதா இடையே சோஷியல் மீடியாவில் வார்த்தை போர் வலுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரி வெற்றி பெற தான் தான் முழுக்க முழுக்க காரணம் என தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசிய ஆடியோ மற்றும் அனிதா சம்பத்துக்கு ஆரி வெற்றியடைந்தது பிடிக்கவில்லை என்ற ஆடியோ என அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சை அதிகரித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆரி ரசிகர்களின் கோபம் அனிதா மேல் திரும்பியது. இதனை அடுத்து விளக்கம் தெரிவித்துள்ள அனிதா, "ஆரி ரசிகர்களை தேவையில்லாமல் தனக்கு எதிராக ரவீந்தர் திருப்பி விட்டதாக" குற்றம் சாட்டி உள்ளார். நான் பாலா, ஆரிக்கு எதிரானவள் இல்லை என் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் ரவீந்தர் பெண் போட்டியாளர்களை குறிப்பாக தன்னை கேவலமாக பேசி வருவதாகவும், இறுதி வாரத்தில் ஆரியுடன் நிகழ்ந்த மோதலை தவிர பெரும்பாலும் ஆரிக்கு ஆதரவாக இருந்ததாகவும், வெற்றியுடன் வெளியே வர ஆரியை வாழ்த்திவிட்டு தான் பிக்பாஸ் வீட்டை வீடு வெளியே வந்தேன் என்றும் அனிதா கூறி உள்ளார்.

    Also Read : பிக்பாஸ் யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..

    ஆரி வெற்றி பற்றி ரவீந்தருடன் பேசிய ஆடியோக்களை ரெக்கார்ட் செய்து அனிதா வெளியிட்டுள்ளார். ஆனால் அது முழுமையான ரெக்கார்ட் இல்லை என்பது ரவீந்தரின் வாதம். அனிதாவின் ஆடியோ பதிவு மற்றும் கருத்து பதிவுகளுக்கு எதிர் ட்விட் வெளியிட்டுள்ள ரவீந்தர் ஜனவரி மாதம் பேசியதை வெளியிட இவ்வளவு நாள் தேவையில்லை. சமீபத்தில் தான் என்னிடம் பேசிய பாலாஜி, உனது மலிவான நடத்தை பற்றி என்னிடம் விரிவாக கூறினார் என்று குறிப்பிட்டுளார். மேலும் பாலாவையும் பாலாவின் ரசிகர்களையும் நீ கொச்சைப்படுத்துகிறாய்.

    மக்கள் ஆடியோவை கேட்டு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளட்டும், ஆரியின் வெற்றியை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறி அனிதா தன்னிடம் பேசிய முழு ஆடியோவையும் விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ரவீந்தர் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 4 முடிந்து பல மாதங்கள் ஆகியும் இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published: