கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிக்பாஸ் பிரபலம் மரணம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிக்பாஸ் பிரபலம் மரணம்

பாடகர் சோமதாஸ்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சோமதாஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

  • Share this:
2008-ம் ஆண்டு ஐடியா ஸ்டார் சிங்கர் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சோமதாஸ் சாத்தனூர். பின்னர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2-வது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த சீசனின் பாதியிலேயே தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் சோமதாஸ். இவர் சங்கர் மகாதேவனின் பல ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். காரணம் சங்கர் மகாதேவனைப் போன்றே குரலைக் கொண்டவர் சோமதாஸ்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் பாடகர் சோமதாஸூக்கு வேறு சில உடல்நல பிரச்னைகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சோமதாஸூக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்ததாகவும் ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு சோமதாஸ் மரணமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீக்கு ஷூட்டிங்கில் விபத்து

மரணமடைந்த சோமதாஸூக்கு இரண்டு குழந்தைகளும், மனைவியும் இருக்கின்றனர். அவரது திடீர் மரணம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதிச்சடங்குகள் சாத்தனூரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்றது. திரைபிரபலங்கள் பலரும் சோமதாஸ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: