‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து 90களில் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் சரவணன் அண்மைக்காலமாக திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். 2007-ம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு சித்தப்பு என்ற பெயரை வழங்கியதோடு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சரவணன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். அப்போது தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக வெளிப்படையாக கூறினார். அதற்கு மன்னிப்புக் கேட்ட பின்னரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அப்போது இந்த விவகாரம் சர்ச்சையானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சொந்த ஊரில் தனது தந்தைக்கு கோவில் கட்டிய சரவணன், ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், வெற்றி பெற்ற கையோடு மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரான சேலம் மாவட்டமே நடிகர் சரவணனுக்கும் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.