பிக்பாஸ் கவினுக்கு கல்யாணமா? மணப்பெண் பற்றி வெளியான தகவல்

பிக்பாஸ் கவினுக்கு கல்யாணமா? மணப்பெண் பற்றி வெளியான தகவல்

நடிகர் கவின்

பிக்பாஸ் பிரபலம் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
விஜய் டிவியில் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிகராக அறிமுகமாகி பின்னர் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த வேட்டையன் கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வெள்ளித்திரையில் தலைகாட்டிய கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், சாக்‌ஷி அகர்வால், லாஸ்லியா ஆகியோரிடம் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் லாஸ்லியா - கவின் இருவரும் காதலில் விழ, லாஸ்லியாவின் தந்தை காதலையும், லாஸ்லியாவின் நடவடிக்கைகளையும் கண்டித்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின் - லாஸ்லியா ஜோடி பிரிந்துவிட்டதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் கவின் - லாஸ்லியா ஜோடிக்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். அதேபோல் லாஸ்லியாவும் ஃப்ரெண்ட்ஷிப் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.

மேலும் படிக்க: ஜெயலலிதா நினைவு தினத்தில் வெளியான ‘தலைவி’ படத்தின் நியூ ஸ்டில்ஸ்

இந்நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஒரு ஸ்டைலிஸ்டை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தகவலை இதுவரை கவின் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: