பாலா இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

news18
Updated: July 24, 2018, 7:18 PM IST
பாலா இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!
பிக்பாஸ்
news18
Updated: July 24, 2018, 7:18 PM IST
இயக்குநர் பாலா இயக்கும் வர்மா படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைஸா வில்சன் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்குகிறார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார்.

இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். ரீமேக் என்றாலும் தமிழில்  சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதாக பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்தன. இதையடுத்து மேகா இப்படத்தில் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ரைஸா வில்சனும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் வர்மா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை ரைஸா முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் மேகா நடிக்கவுள்ள நிலையில் ரைஸாவின் கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ரைஸா ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்