திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

Web Desk | news18
Updated: October 9, 2019, 1:13 PM IST
திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!
லாஸ்லியா. (image: Instagram)
Web Desk | news18
Updated: October 9, 2019, 1:13 PM IST
தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும்,  ஆனாலும் தனது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் தான் நடக்கும் என்றும் லாஸ்லியா கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, "இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பா வந்தபோது அவரை இந்த சமூகம் எப்படி நடத்தியதோ அது எனக்குத் தெரியாது. அவர் என்ன பேசினாலும் என் அப்பாதான். அந்த உறவில் எந்த சிக்கலும் கிடையாது. என்னுடைய நன்மைக்காகத் தான் அவர் அப்படி பேசியுள்ளார்.

Loading...

Also see... பிக்பாஸ் லாஸ்லியாவின் ரீசென்ட் கிளிக்ஸ்!

எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்.” என்று கூறியிருந்தார்.

இந்த சீசனில் கவின் -லாஸ்லியா இடையே இருந்த காதலும், லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் பார்வையாளர்களிடையே அதிக கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

First published: October 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...