அன்பு குரூப் அர்ச்சனாவுக்கு கிடைத்த அன்பு பரிசு!

அன்பு குரூப் அர்ச்சனாவுக்கு கிடைத்த அன்பு பரிசு!

விஜே அர்ச்சனா - பிக்பாஸ் தமிழ் 4

பாஸிட்டிவான அன்பு அர்ச்சனாவுக்கு மட்டும் எதிர்மறையாக மாறியது.

 • Share this:
  ரசிகை ஒருவர் தனக்குக் கொடுத்த அன்பளிப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அர்ச்சனா.

  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4'யில் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பைப் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் அன்பு குரூப்பை உருவாக்கினார் அர்ச்சனா. அதனால் நிகழ்ச்சி முடித்த பிறகும் கூட அவரை அன்பு அர்ச்சனா என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

  பாஸிட்டிவான அன்பு அர்ச்சனாவுக்கு மட்டும் எதிர்மறையாக மாறியது. ஆனால் தான் தொடர்ந்து மற்றவர்களிடம் அன்பு செலுத்துவேன் என்றும், அன்பு வெல்லும் என்றும் அவர் அழுத்தமாக நம்புகிறார்.
  இதற்கிடையில், அர்ச்சனாவின் தீவிர ரசிகை ஒருவர் அவருக்கு பிரபலமான மூன்று பொம்மைகளை பரிசாக அளித்துள்ளார். "கெட்டதைக் காணாதீர்கள், கெட்டதைக் கேட்காதீர்கள், கெட்டதை பேசாதீர்கள்" என்று பொருள்தரும் 3 பொம்மைகளுடன் ”அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற திருக்குறள் வரியுடன் பூவிழி என்ற ரசிகை பரிசளித்துள்ளார்.

  அதை ட்விட்டரில் பகிர்ந்த அர்ச்சனா, "அருமையான பரிசுக்கு மிக்க நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: