Home /News /entertainment /

பாத்ரூம் டூர் வீடியோ விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனா

பாத்ரூம் டூர் வீடியோ விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனா

அர்ச்சனா

அர்ச்சனா

தற்போது பிக்பாஸ் அர்ச்சனா என்று அறியப்படும் இவர், ஒரு காலத்தில் காமெடி டைம் அர்ச்சனா என்று ரசிகர்களிடம் பெயர் வாங்கி இருந்தார்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பல ஆண்டுகளாக தமிழ் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரது முழு பெயர் அர்ச்சனா சந்தோக். பல தமிழ் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியதால் ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றிருந்தார். சில திரைப்படங்களிலும் தலை காட்டியுள்ளார். 1999-ம் ஆண்டில் கல்லூரியில் படிக்கும் போது ஜெயா டிவியின் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது தொழில்துறை வாழ்க்கையை துவங்கினார் அர்ச்சனா. பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான மிகப்பெரிய ஹிட் நிகழ்ச்சியான "காமெடி டைம்" நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் சிட்டி பாபுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி சின்னத்திரையில் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

தற்போது பிக்பாஸ் அர்ச்சனா என்று அறியப்படும் இவர், ஒரு காலத்தில் காமெடி டைம் அர்ச்சனா என்று ரசிகர்களிடம் பெயர் வாங்கி இருந்தார். குடும்ப வாழ்க்கையை கவனிக்க 2007ல் சன் டிவியை விட்டு வெளியேறினார். பின் 2009-ல் ஸ்டார் விஜய் டிவிக்கு சென்ற அவர் 2013-ம் ஆண்டு வரை "நம்ம வீட்டு கல்யாணம்" நிழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின் ஜீ தமிழ் சேனலில் அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்தார்.

பின் நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் மற்றும் குஷ்பு ஆகியோருடன் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் ஜட்ஜ்களில் ஒருவராக தோன்றினார். இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது இவரது வாழ்க்கை. கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 4-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்நுழைந்த இவர், மீம் கிரியேட்டர்கள் மற்றும் ட்ரோல் செய்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கன்டென்ட்களை கொடுத்து சமூக வலைத்தளங்களில் ரோஸ்ட் செய்யப்பட்டார்.

Also Read : மார்பிங் வீடியோவால் உடைந்துப் போன நடிகை - சைபர் கிரைமில் புகார்

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா தனக்கென்று ஒரு குரூப்பை சேர்த்து கொண்டதும் அன்பு, அன்பு என்று அதை பற்றி மட்டுமே பேசி குரூப்பிஸத்தில் ஈடுபட்டதும் நெட்டிசன்கள் அவரை கேலி மற்றும் கிண்டல் செய்ய துவக்கமாக அமைந்தது. ஜீ தமிழ் சேனலில் நல்ல தொகுப்பாளர் என்ற பெயருடன் இருந்த அர்ச்சனா, பிக்பாஸில் பங்கேற்றதற்கு பின், ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே தற்போது வரை சந்தித்து வருகிறார் என்றால் மிகையாகாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் அர்ச்சனா தனது யூடியூப் சேனலில் போட்ட பாத்ரூம் டூர் இதுவரை அவர் வாழ்க்கையில் சந்திக்காத அளவு விமர்சனங்களை சந்திக்க காரணமாக அமைந்தது. சிறிய யூடியூப் சேனல் முதல் பெரிய யூடியூப் சேனல் வரை மொத்த பேரும் அர்ச்சனாவை கலாய்த்து தள்ளிவிட்டனர். அர்ச்சனா மற்றும் அவர் மகள் மீதும் தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் அதிர்ந்து போனார். இதனிடையே மத ரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையில் ஒருவர் தன்னை தாக்கி பேசிவிட்டு இறுதியில் "ஜஸ்ட் ஃபார் ஃபன்" (Just for fun) என்று தெரிவித்ததாக இன்ஸ்டாவில் ஒரு யூஸர் போஸ்ட் செய்திருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள அர்ச்சனா பேசுவதை எல்லாம் பேசிவிட்டு கடைசியாக ஜஸ்ட் ஃபார் ஃபன் என்ற துஷ்பிரயோகத்தை பயன்படுத்தும் இது மாதிரியான செய்கைகளை தான் நிறைய பார்த்துள்ளதாக கூறி உள்ளார்.

 
Published by:Vijay R
First published:

Tags: Archana biggboss, Bigg Boss

அடுத்த செய்தி